Wednesday, April 1, 2020

தனித்திரு தனித்து இரு தனித்தே இரு...... corono


ஏப்ரல் 1 முதல் 14 தீவரமாக ஊரடங்கைக் கடைபிடிக்க வேண்டிய நாட்கள்.... இதோ மார்ச் 22 முதல் ஊரடங்கு போட்டு இன்று 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு உச்ச கட்டத்தை அடையும் நாட்கள் இனி வரும் நாட்கள்... அறிகுறி உள்ளவர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ளவும்... இல்லையெனில் கொரோனா உங்களைக் கொல்லும்....
அடுத்து வரும் நாட்கள் மிக கவனம்... ஆனால். தற்போது நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதா? அல்லது மீறப்படுகிறதா? என்று கேட்கத்தோன்றுகிறது....
எனக்கு வராது என்பது நம்பிக்கை
எனக்குலாம் வராதுப்பா என்பது தன்னம்பிக்கை
எனக்கு வரவே வராது என்பது தலைக்கனம்...
நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அவசியம்.. ஆனால் தலைக்கனம் கூடவே கூடாது...... அது நம்மையும் அழித்து நம் கூட உள்ளவர்களையும் அழிக்கும்..
ஆகவே மக்களே நாமாக முன்வந்து ஊரடங்கைக் கடைபிடிப்போம்... கஷ்டம் தான் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பது.. ஆனால் வேறு வழயில்லை.... முடங்கிகிடக்கவில்லை எனில் போட்டோ பிரேமில் காலம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலை வரலாம்... தயவுசெய்து கடைபிடிப்போம்..
தனித்திரு
தனித்து இரு
தனித்தே இரு......


No comments:

Post a Comment