Thursday, April 9, 2020

மே மாதம் தேர்வா? அய்யோ

மே மாதம் பொதுத்தேர்வா?... ப்ளீஸ் ஒரு நிமிடம்…
இதையும் கொஞசம் யோசித்துப் பார்க்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏப்ரல் 8 இன்று செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் மே மாதம் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பு… என்று செய்திகள் வாட்சப்பில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வழக்கம்போல வதந்தி பரவும் வேகத்தில் ஆசிரியர்கள் மத்தியில் இன்றைய ஹாட் நியூஸ் இதுதான்..
பொதுவாக நம்முடைய உடல் சில பழக்கவழக்கங்களுக்கு ஏற்றதாக மாறியிருக்கும் கும்கி படத்தில் தம்பிராமையா ஒரு வசனம் பேயிசிருப்பார். ”அப்புறம் அதுவே பழகிப்போய்டும்“ என்று.. இது சாதாரண வசனம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.. தவளை ஒரு இருவாழ்வி.. அது தன் உருவை மாற்றி வாழ்விடத்திற்கு ஏற்றவாறு அமைக்கும்.. நிலத்தில் நுரையீரலிலும் நீரில் செவுள்களாலும் சுவாசிக்கும். ஒட்டகம் பாலைவனத்திற்கு ஏற்றவாறு தன் உடலமைப்பைத் தகவமைத்துக்கொள்ளும்.. வலசைக்கு வரும் பறவைகள் நம் நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ளும்.
சரி பொதுத்தேர்வுக்கும் வலசை போவதுக்கும் என்ன சம்பந்தம்… இருக்கு.
          சாதாரணமாக நாம் பள்ளியில் சாப்பிடும் நேரம் 12.40.. வேலைநாளில் சரியாக 12.40க்கு பசி ஏற்படும். ஆனால் அதே வீட்டில் இருந்தால் 2 மணிகூட ஆகும். ஆனால் சரியாக 12.40 என்பது நாம் வீட்டிலிருக்கும்போது இல்லை. ஏன் அது பள்ளி நேரம் என்றால் கூட. பாவ்லவ் சோதனையில் மணி அடித்தவுடன் நாய்க்கு வாயில் எச்சில் ஊறுமே அப்படி சில பழக்க வழக்கங்களுக்கு நம் உடல் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும். தினமும் ஒரு 4 மணிக்கு எந்திரியுங்கள். ஒரு வாரம் கழித்து அந்த நான்கு மணிக்கு நீங்கள் அலாரம் வைக்காமலேயே எந்திருப்பீர்கள்… இதுதான் நம் உடலின் அதிசயம்.. இரகசியம்.. சமீபத்தில் ஒரு பிரபல மருத்துவர் பேசிய வீடியோ வாட்சப்பில் வலம் வந்தது. இதயத்திடம் நாம் பேசலாம்? இதயத்திடம் எப்படி பேசுவது? ஆச்சர்யமாக இருக்கிறதா? இப்போது நீங்கள் ஒரு அவசரகாரியமாக மாடிப்படியில் வேகமாக ஏறும்போது இதயம் பட்பட் என்று துடிக்கும்.. அப்போது இதயம்” ஏன் இவ்வளவு வேகமாக போகிறாய்? இவ்வளவு நாள் இப்படி போகவில்லையே? எனக்கு இப்படி பழக்கமில்லையே.. அதனால் எனக்கு பழக்கம் ஏற்படுத்திவிட்டு அதற்குபிறகு இப்படி வேகமாக ஏறு. என்று இதயம் நம்மிடம் பேசுமாம்.. பட்பட் என்கிற துடிதுடிப்பு இதயத்தின் பேச்சு… என்று பேசியருப்பார்….. ஆக நம் உடல் ஒரு இரகசியம்.. பரம இரகசியம்..
அதற்கு செப்டம்பர் என்றால் காலாண்டுத்தேர்வும் உடன் ஓரு 9 நாள்கள் லீவும்… டிசம்பர் என்றால் அரையாண்டுத்தேர்வும் ஒரு 9 நாள் லீவும் மார்ச் ஏப்ரல் என்றால் பொதுத்தேர்வு உடன் மேமாதம் முழுவதும் லீவு என்றும் பழக்கப்படுத்திக் கொண்ட இவ்வுடல் உடனே ஒரு மாற்றத்திற்கு ஏற்றுக்கொள்வது மிககடினம்.. நமக்கே இப்படி என்றால் திங்கள் கிழமையையும் வெள்ளிக்கிழமையையும் வேறுபடுத்தி பார்க்கும் மாணவன் சனிக்கிழமை என்றால் சந்துாசமாக இருப்பான்.. அவனுக்கு எப்படி இருக்கும்?  வீக் எண்ட் என்றால் வேலைபார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சி வருமே அப்படித்தான். மே மாத விடுமுறை என்பது…… ஏற்கனவே ஒட்டிக்கொண்ட ஒப்புக்கொண்ட விடுமுறைக் கொண்டாட்டம்.. அதில் தேர்வு என்பது என்பது உளவியல் ரீதியாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் மிக கடுமையாகப் பாதிக்கும்.. அக்னி நட்சத்திரம் வேறு அனலாய்க் கொதிக்கும் வேளையில் பச்சிளம் பாலகர்களை தேர்வுக்கு தயார் செய்வதும் அவர்கள் தேர்வெழுதுவதும் மேலும் மன அழுத்தத்தையேக் கொடுக்கும். எனவே ஜுன் மாதம் உடனடித்தேர்வுக்கு தயாராவோமே அப்படி ஜுன் மாத இறுதியில் வைத்தால் உடலும் மனமும் இருவருக்கும் தயாராக இருக்கும். ஆகவே மே மாதம் தேர்வு என்பதை கொஞ்சம் மறுபரீசிலனை செய்ய வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

விடைத்தாள் திருத்தும் பணியை இப்போது ஆரம்பித்து பன்னிரண்டாம் வகுப்பிற்கும் உடனடித்தேர்வு வைக்கும் ஜீன் மாத இறுதியில் பத்தாம் வகுப்பிற்கும் பதினொன்றாம் வகுப்பிற்கு எஞ்சியுள்ள தேர்வுகளுக்கும் தேர்வு வைத்தால் மாணவர்களும் ஆசிரியர்களும் சந்தோசப்படுவார்கள்… என நம்புகிறேன்.

No comments:

Post a Comment