வேள்பாரியும் நானும் 3வேல்முருகனிலிருந்து
வேள்பாரி வரை கதையைக் கேட்ட கபிலருக்கு மீண்டும் தனைமயக்கி மூலிகையைச் சாப்பிடது போலிருந்தது……………(
வேள்பாரியும் நானும் 2) கபிலரைப்பார்க்க ஊர்ப்பழையன் வந்திருக்கிறார்
என்ற தகவலை நீலன்தான் கபிலரிடம் சொன்னான்.. ஊரின் முதும்பெரும் மனிதர்கள் பழையன் பழைச்சி
என்றழைக்கப்பட்டனர். கபிலர் உட்காந்திதருந்த மரம் திறளி மரம்.. மூவேந்தர்களுக்கும்
பிடித்தமான மரம் திறளிமரம். யவனர்கள் எந்நத
விலை கொடுத்தேனும் வாங்கத்தயாராக இருந்தது மிளகு. மிளகுக்கு அவர்களின் நாட்டில் அவ்வளவு
கிராக்கி.. யவனக்கப்பல்களில் ஏற்றுவதற்காக கரையோரத்திலிருந்து சிறிய தோணியில் மிளகு
கொண்டு செல்லப்படும்.. அந்தத் தோணி திறளி மரத்தால் செய்யப்பட்டது. யவனநாட்டு வணிகம் செழித்தருந்தததை கரையில்
நிற்கும் திறளி மரத் தோணிகளே எடுத்துக்காட்டும். அதுவும் குலசேகரப்பாண்டியனுக்கு தேறலை
ஊற்றிக்கொடுக்க ஒரு கிளாசரினா தேவைப்படுகிறாள் என்றால் யவன வணிகத்தின் நுணுக்கங்களைத்
தெரிந்து கொள்ளுங்கள். திறளி மரத்தை யவன வணிகர்கள் டிரோசி என்றே அழைத்தனர். இப்படி செழிப்பான திறளி மரத்தினால்
செய்யப்பட்ட பலகையில் கபிலர் உட்கார்ந்திருக்கையில் நீலன் ஊர்ப்பழையனை அழைத்து வந்திருந்தான்.
பழையன் கபிலருக்கு அருகில் உட்கார்ந்திருந்தார்.. இருவருக்கும் முன் கூடையில் நாவல்
பழம் வைக்கப்பட்டிருந்தது. கபிலர் நீலன் என்னைக் காப்பாற்றி பாதுகாப்போடு
அழைத்து வந்தததை பழையனிடம் சொல்லும்போது.. பழையன் நாககிடங்கின் வழி அழைத்து வந்திருக்கிறான்..
அதன் ஆபத்தை உணராமல். வயது அப்படி அழைத்து வந்திருக்கிறது. நாககிடங்கின் வழி வருவது
என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நாவல் பழத்தைச் சாப்பிடுங்கள் என்றார் பழையன்.
எந்த நாவல் பழத்தை முதலில் சாப்பிட வேண்டும் என்பதில் தொடங்குகிறது காடு பற்றிய அறிவு
என்று பழையன் கூற… கபிலர் எந்தப்பழத்தைச் சாப்பிட என்று தெரியாமல் ஒரு பழத்தை எடுத்துச்
சாப்பிடுகிறார். பழையன் ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிடுகிறார். பழையனின் வயது தொண்ணுற்றேழு
என்கிறார். அடுத்து பழையன் சாப்பிட்டது உச்சபட்ச துவர்ப்போடு இருந்த நரிநாவல் பழத்தை…
நீலனுக்கு பழையன் முதலில் சாப்பிட்டது வெண்நாவல் என்பதைத் தெரிந்து கொண்டான்.. வெண்நாவல்
சாப்பிட்டால் அடுத்து நரிநாவல் தான் சாப்பிட வேண்டும். கபிலருக்கு பழையனின் வயதை எப்படி 97 என்கிறார்
என்ற ஐயம்.. கேட்டும் விட்டார்.. நாவற்பழத்தின் ருசியை மென்று தின்ன பழையன் மேல்மலையில்
இருக்கும் குறிஞ்சிச்செடியில் இரண்டாவது கணுவில் பூபூத்த போது நான் பிறந்தேன் என்று
என் தாய் சொன்னாள்.. இப்போது அந்த குறிஞ்சி செடியில் பத்தாவது கணு முளைத்திருக்கிறது.
அப்போ என் வயது நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்களேன். கபிலர் கணக்கிட்டு பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவைக் கொண்டு ஒருவர் வயதைச ்சரியாக சொல்கிறார்
என்று பழையனின் கணித அறிவை வியந்து கொண்டிருந்தார். கணிதம் கடலில், கப்பலில் இருக்கிறது குறிஞ்சிபூவின்
கணுவிலும் இருக்கிறது என்பதை உணர்ந்தார் கபிலர். இப்போது நீலன் இன்னும் மலையில் பாதுகாப்பாக
ஏற வேண்டுமென்றால் தும்முச்சி சாறைக் குடித்துவிட்டு படுங்கள் என்று சொல்லிச் சென்றான்
சிறிது நேரத்தில் தும்முச்சி சாறு வந்தது.. கபிலர் குடித்துவிட்டு இன்னும் என்னென்ன
வியப்புகள் இருக்கின்றனவோ என்று நினைத்தவாறே கண்ணுறங்கினார். மறுநாள் காலை பெண் ஒருத்தி துவையலோடு அணில்வால்திணைக்
கஞ்சியைக் கொண்டு வைத்தாள். கபிலர் ஒரு வாய் குடித்து துவையலை தொட்டு நாக்கில் வைக்க
காரமலை என்ற பெயர்க்காரணத்தை உணர்ந்தது போல அவ்வளவு காரம் என்று சொல்ல கஞ்சி கொண்டு
வந்த பெண் சிரித்தாள்.. ஏன் சிரிக்கிறாய்? நான் கொண்டு வந்த நாவல் பழங்களில் நீங்கள்
முதலில் பூநாவலைச் சாப்பிடீர்களாமே? ஆமாம்.. எனக்கு என்ன தெரியும்? அய்யோ அந்த பூநாவலை
உதிரப்போக்கு நிற்காத பெண்கள்தான் சாப்பிட வேண்டும்.. அதற்குதான் சிரித்தேன். பழையனும் நீலனும் வந்துவிட்டார்கள். பழையன்
பாரியைப் பார்த்து விட்டு எப்போது திரும்பி வருவீர்கள். ஒரு மாத திட்டம் தான்.. உடன்
வந்து விடுவேன்.. அப்படியானால் நீங்கள் கொற்றவைக் கூத்ததைப் பார்க்கலாம். பரியோடு என்றார்
பழையன். நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கூத்து.. பாணர்கள் கூட்டம் எங்கிருந்தாலும்
வந்து இந்தக் கூத்தை நடத்தும்.. அதை பாரியோடு நீங்களும் பார்க்கலாம். மறுநாள் காலை பத்துக்கும் மேற்பட்டோரோடு
கபிலர் எவ்வியூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பழையன் காட்டின் பெருமையையும், காடுகளில்
கிடக்கும் ஆபத்தையும் சொல்லிக்கொண்டே வந்தார். கதைகேட்க கபிலருக்கு கேட்கவா வேண்டும்..
கேட்டுக் கொண்டே வந்தார். ஒற்றையடிப்பாதையில் நடக்க காடுகளின் ஆச்சர்யத்தை கவிதையோடு
கண்டு களித்தார் கபிலர். திடீரென்று பறவைகள்
கூட்டம் கீ…கீ… என்று சத்தம் போட்டு அங்குமு் இங்குமாக பறக்கத் தொடங்கின.. ஏதோ ஆபத்து
என்பதை பழையன் கண்டு ” டேய் நீலா.. காக்கா விரிச்சிடா.. எல்லாரும் பதுங்குங்க.. என்று
சத்தமிட.. அனைவரும் அருகில் உள்ள பாறை இடுக்குகளில் புதையுண்டது போல ஒட்டிக்கொண்டனர். அனைவரும் அந்த காக்க விரிச்சியைப் பார்த்துவிடலாம்
என்று கண்களை மேயவிட கபிலர் தனித்து நின்று கொண்டிருந்தார். ஒரே பாய்ச்சலில் கபிலரை
இழுத்து பாதுகாத்தான் நீலன். காக்கா விரிச்சி பறவைகளின் உடல்களைத் துண்டாடி பறந்து
சென்றதை பழையன் மட்டுமே கவனித்து போயிருச்சுடா என்றார். அனைவரும் வெளியில் வந்தனர்.
சிறிய போர்க்களம் போல் காட்சி அளித்தது.. காக்காவிரிச்சி வந்து சென்ற சில நொடிகளில்
அந்த இடம்.. கபிலர், பழையனிடம் இதற்கு முன் இதைப் பார்த்திருக்கிறீர்களா
என்று பழையனிடம் கேட்டார்?... பழையன் என் கண்முன்னே எனது மனைவியின் கழுத்தை அறுா்துவிட்டுச்
சென்றது இந்தக்காக்கா விரிச்சி என்றபோது அனைவரும் பாறைகளுக்குள் ஏன் புதையுண்டதுபோல
ஒழிந்துகொண்டார்கள் என்பதை உணர்ந்தார் கபிலர்.இந்தக்
காக்கா விரிச்சியை கண்ணிமைக்கும் வெட்டி வீழ்த்தியவன் பாரி…. மீண்டும் ஒரு வீரக்கதை
கேட்க தயாரானார் கபிலர்… நீங்களும் தானே…. .. கதை வரும்…
Subscribe to:
Post Comments (Atom)
-
வகுப்பு 9 கவிதைப்பேழை சிறுபஞ்சமூலம் சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர் , நெருஞ்சி வ...
-
9ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம்..... கல்வியில் சிறந்த பெண்கள் - சிறுதேர்வு சரியான விடையைத் தெரிவு செய்க. 1. படிக்க வேண்டும் ...
-
வேள்பாரியும் நானும் 3 வேல்முருகனிலிருந்து வேள்பாரி வரை கதையைக் கேட்ட கபிலருக்கு மீண்டும் தனைமயக்கி மூலிகையைச் சாப்பிடது போலிருந்தது…………… (...
No comments:
Post a Comment