நண்பர்களே!... சிறிதுகாலம்… வேள்பாரியோடு பறம்புமலையைச் சுற்றிப்பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
144 இல் இது சாத்தியமா என்று கேட்டுவிடாதீர்கள்…
கேட்கமாட்டீர்கள் என்றும் தெரியும்….
ஏனென்றால் நான் செல்வது தனியாக அல்ல….
காவல் கோட்ட கதாநாயகன்…
மதுரை மணிணன் மைந்தன்…
மக்களவையில் சொக்க வைக்கும் பேச்சால்
அரங்கின் கவனத்தை அகிலத்திற்கு கொண்டு செல்பவன்
என் ஆதர்ச எழுத்துலக நண்பர்..… சு. வெங்கடேசன் அவர்களோடும்.
மணியம் செல்வம் அவர்களோடும் பயணிக்கப் போகிறேன்..
நீங்களும் வருகிறீர்களா? வருவீர்கள்….
பாரியின் பறம்புமலைக்கு செல்வதை யார்தான் விரும்பமாட்டார்கள்…
வாருங்கள் கபிலரோடு கதைப் பேசி….
பச்சைமலையில் மூச்சிறைக்க ஏறி……
பாரிமகளிரோடு பல்லாங்குழி விளையாடி….
மூவேந்தர்களின் படைகளும் பாரியின் படைகள் முன் மண்டியிட்டதை பார்வையிட்டு,……..
இறுதியாக சதிசெய்து வீழ்த்தப்பட்ட
எங்கள் தமிழர்குலத்தின் வீரத்தலைவன்…
வழங்குவதில் வள்ளல்…
கொடுப்பதில் கொட்டித்தீர்க்கும் கோடைமழை…
பகிர்வதில் பருவமழை…
தாங்குவதற்கு தோளைக் கேட்டாலும் கொடுப்பான்
தேரைக் கொடுக்கவா யோசிப்பான்….
இங்கே கேட்காமலேயே கொடி ஒன்று படர்வதற்கு வழியில்லாமல் தவிக்கிறதாக நினைக்கிறான் ……
கொடியைப் பார்த்த அடுத்த நொடி தேரை படர்வதற்கு விட்டுச்சென்ற பறம்புமலையின் நிரந்தர தலைவன்….
அப்பேர்பட்ட பாரியைக் கண்டு நலம் விசாரித்து வரலாம்…
என்னோடு…
நான் தருவது… ஊறுகாய்….
தொட்டுக்க துவையல்… அப்பளம்…
ஒரு பொறியல்…. கொஞ்சம் தயிர்..
இப்படி சாப்பாட்டிற்கான ஷைடிஸ்…. மட்டுமே….. அவ்வளவுதான்..
முழுச்சாப்பாட்டையும் என்னால் தரமுடியாது…
நீங்கள் வேள்பாரியோடு வலம் வரும்போது முழுச்சாப்பாட்டையும் சாப்பிடுங்கள்... இப்போது கொஞ்சம் தொட்டுக் கொள்ளுங்கள்….
குதிரை வீரன் நாகு, அடுத்து அந்த வேலையை ஆதனிடம் ஒப்படைக்கிறான். ஆதன் அழைத்துச் செல்ல வேண்டியது யாரென்று தெரியாமல் வினவ… கபிலர் என்று தெரியவருகிறது.. கபிலரோடு பயணிக்க போகிறோமா? என்ற ஒருவித பயம் கலந்த ஆச்சர்யத்துடன் அடுத்த நாள் கபிலரைக் கண்டவுடன் தரையில் படுத்து வணங்குகிறான்.. கபிலரோ குதிரையின் கழுத்தைத் தடவி மயிலுக்கும் குதிரைக்கும் கழுத்தே அழகு என்று வர்ணித்து தன் தமிழைத் தாரை வார்க்க ஆரம்பிக்கிறார். பச்சை மலையின் முன்னால் இருக்கும் வேட்டுவன் பாறையில் இறக்கிவிட்டு.. இதுதான் பாரியின் பறம்பு மலைக்கு செல்லும் வழி என்று கபிலரை விட்டுவிட்டு சென்று விடுகிறான்.. பச்சைபசேல் என்று காட்சியளிக்கும் பச்சை மலையில் கபிலர் ஏற ஆரம்பிக்கிறார். திடீரென்று ஒருவன் வேகமாக அவர் முன்னால் செல்கிறான். செல்பவனின் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகம்போல் அதே நேரத்தில் நீங்கள் யார் என்று சவினவிக்கொண்டே செல்கிறான்.. ஒரு இடத்தில் கபிலர் சிறிது ஓய்வெடுத்துச் செல்லலாம் என்பது போல் அமர்கிறார். அருகில் வேப்பம் பூ கிடக்கிறது.. இது என்ன தெரியுமா? பாண்டியர்களின் மாலை என்கிறார். கபிலர். அதற்கு அந்த வழிப்போக்கன் அதான் நீலன் ஆமாம இந்த பூவைப்போல வயல்நண்டின் கண்கள் இருக்கும் என்கிறான்.. கபிலருக்கு ஆச்சர்யம்… இருவரும் பேசிக்கொண்டே போகிறார்கள். காரமலையின் உச்சிக்கு வந்துவிடட்டால் அடுத்தஅடுத்த மலைகளின் பார்வை கிடைக்கும் என்கிறான். மலையின் உச்சிக்கு வந்து மலைகளின் வசீகரத்தை உற்று நோக்குகிறார் கபிலர். சீக்கிரம் செல்லாவிட்டால் இருட்டிவிடும் என்று விரைவாக நடக்க கபிலரிடம் கோரிக்கை வைக்கிறான்.. வயல்நண்டைப் பார்த்திருக்கிறாயா? என்ற கபிலரிடம் பனம்பூ போல இருக்கும் வயல் நண்டு என்கிறான். கபிலரோ கடல் நண்டைப் பார்த்திருக்கிறாயா? இல்லையே கடலையே பார்த்தது இல்லை என்கிறான். நீலன்.. கடல் எவ்வளவு பரந்தது விரிந்தது தெரியுமா? இதைக் கேட்டவுடன் நீலன் எங்கள் பாரியின் கருணையை விடவா உங்கள் கடல் பெரியது என்கிறான்?........
இன்னும் .போவோம்..
( குறிப்பு வேள்பாரியின் வெற்றி விழாவில் ஐயா உதயச்சந்திரன் , பாரதி பாஸ்கர்... மணியம் செல்வம்... வெயில் வசந்தபாலன்... பழ.கருப்பையா இவர்களின் பேச்சை அருகிலிருந்து கேட்டவன்...)
No comments:
Post a Comment