வேள்பாரியும் நானும் 3
இந்தக் காக்கா விரிச்சியை கண்ணிமைக்கும் வெட்டி வீழ்த்தியவன்
பாரி…. மீண்டும் ஒரு வீரக்கதை கேட்க தயாரானார் கபிலர்… ….
நீங்களும் தானே கதை தொடரும்….. இதோ தொடர்கிறது.
வேள்பாரியும் நானும் 4
கபிலரோடு அனைவரும்
புலிவால் குகைக்கு வந்தனர். ஏற்கனவே பறம்பில் நடக்கும் கொற்றவை கூத்தினை பார்க்க பலர்
அந்தக்குகையில் தங்கியிருந்தனர். நீலன் கபிலருக்கு பனையோலையில் கறித்துண்டங்களைத் தந்து
சென்றான். கபிலர் விரும்பி உண்டான்.. இன்னும் தேவைப்பட நீல்ன அங்கு அப்போது இல்லை.
ஒரு குழந்தை அழவே அப்பெண்ணின் தாய் கையிலிருந்த இறைச்சித் துண்டங்களை கபலரிடம் கொடுத்து
குழந்தைக்கு பால் கொடுக்க போனாள். குழந்தை தூங்கியதும் இவளின் பசி மீண்டும் விழித்தது.
கறித்துண்டங்களை யாரிடம் கொடுத்தோம் என்று தேட முற்பட ““ மகளே இங்கு இருக்கிறது வா!
என்றது கபிலரின் குரல்.
கபிலரோடு வந்திருந்த பழையனை அடையாளம் கண்டு
பலரும் விசாரித்தனர். வேட்டுவர்க் கூட்டத்தில் வந்திருந்த பறம்பு நாட்டு தென்பகுதி
எல்லைக்காவலன் கூழையன், பழையனைப் பார்த்து அவரிடம் பேச்சு கொடுத்தான். சேரனின் மிளகை
வணிகத்தில் பின்னுக்குத்தள்ளி பாண்டியரின் கொற்கை முத்துக்கள் இப்போது வணிகத்தில் கொடிகட்டிப்
பறக்கின்றன. இப்போதெல்லாம் நிறைய ஒற்றர்கள் வருகின்றனர். கொஞ்சம் கவனம் தேவை.. நான்
கொற்றவை கூத்தபை் பார்ப்பதற்கு வரவில்லை.. எல்லைக் காக்க போகிறேன். அப்போ கபிலரைச்
சந்துகிக்றாயா? கூழையா என்றார் பழையன். பாணர் பரிசில் பெற வருகின்றனர்… பாட்டு எழுதும்
கபிலருக்கு இங்கு என்ன வேலை? அவர்களுக்கு உதவதான் மூவேந்தர்களும் இருக்கின்றனரே… தனழயாக
தேரில் வந்து காட்டின் இத்தனை கஷ“டங்களையும் கடந்து எதற்காக பாரியைப் பார்க்க வேண்டும்?
ஈச்ச மதுவும் கறித்துண்டும் அனைவரையும் பசியாற்றி உறங்க வைத்தது. கபிலர் விழித்து பார்த்த
போது யாரும் அங்கில்லை. குகையைச் சுற்றி சுற்றிப் பார்த்தால். யாருமே அங்கு இல்லை.
குகை முகப்பில் ஒளி வந்து கொண்டிருந்தது.. கூடவே அந்த உருவமும்.. கபிலருக்கு பிடிபடவில்லை
வருவது யாராக இருக்கும்? என்று கணக்கு போட்டு எழ முயன்றார். ஆனால் முடியவில்லை. வெளியில்
மலைச்சரிவில் மொத்த கூட்டமும் நின்றது. எதிரில் வந்த உருவம் இப்போது குரல் கொடுத்தது..
கூர்ந்து கவனித்தார் கபிலர். ” முதுல் நாளே தசை பிறண்டு, நாக்கறுத்தான் புல்லறுத்து,
காக்காவிரிச்சி நிலைகுலைய வைத்துள்ளது. நீலன் வேறு தள்ளிவிட்டிருக்கிறான். இத்தனையும்
கடந்து வந்திருக்கிறீர்கள். இனியாவது என் தோளில் ஏறி வர சம்மதிப்பீர்களா?
கபிலருக்கு பயங்கரமான திகைப்பு.. யாரிவன்..
நம்மைத் தூக்கிக்கொண்டு போக போறானா? ஆச்சர்யம் அளவில்லாமல் காடுகளில் கிடைத்தது. நெருங்கி
வரும் அந்த உருவத்தைக் கேள்வி கேட்டார்?
நீங்கள்
யார்?
“வேள்பாரி“
கபிலரைத்
தூக்கி வந்தான் பாரி என்று கேள்விபட்டதும் பறம்பு மலையே பொறாமை கொண்டது போல் இருந்தது.
மக்கள் எல்லாரும் கபிலரைப் பற்றியே பேசிக்கொண்டனர். நீலனின் புகழ் வீரத்தால் மட்டுமல்ல
குணத்தாலும் உயர்ந்தது. கொற்றவைத் திருவிழாவுக்கு ஒரு வாரம் இருக்க “ கபிலருக்குத்
திருவிழா “ என்று அறிவித்தான் பாரி. கபிலரைக் கொண்டாடின. அவருக்கு அறுபதாங்கோழி விருந்து
படைக்க பாரி ஆசைப்பட்டு அதைத் தேடி போனார்கள். அது கிடைப்பது அரிது.. ஆனால் கபிலருக்கு
கொடுக்க வேண்டியது பபடி சிறப்புடையதைத்தான்.
பாரியின் நிழல் போன் நின்றான் முடியன். இது
பெயரல்ல பட்டம்.. தளபதி போன்றது. இருவகையான ஆயுதங்களை ஒருசேர வைத்திருக்கும் திடகாத்திரமான
தளபதி. இன்னொருவர் தேக்கன்.. இதுவும் பட்டம் தான். சிறுவர்களை காடுகளுக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு
பயிற்சி அளிப்பது இவரின் வேலை.. பேராண்மை ஜெயம் ரவி போல இவர். கபிலர் வந்து நானாம்
நாள் இதுவரை அறுபதாங்கோழி கிடைக்கவில்லை. பாரி தென்புற காட்டுக்குள் அவசரமாக இறங்கினான்.
அறுபதாங்கோழி கிடைத்துவிட்டதோ என்று அனைவரும் ஆளாய்ப் பறந்தனர். பாரியைப் பற்றி பாணர்கள்
பாடிய பாட்டுக்கள் தான் மூவேந்தர்களையும் சமவெளி மக்களையும் சென்றடைகிறது. ஆனால் பாரியின்
வாழ்க்கை பறம்பில் உள்ள மக்களுக்கு மட்டுமே தெரியும். “ இல்லாதவர்கள் போனால் இல்லை
எனச் சொல்லாமல் அள்ளித்தருகிறான் பாரி“ என்று பாரியின் புகழ் அவனியில் உலா வந்தன. அங்குதான்
இப்போது கபிலர் வந்திருக்கிறார். எவ்வியூர் பறம்புநாட்டின் தலைநகர். அங்குதான் இப்போது
கபிலர் இருக்கிறார். பறம்பு மக்களை கபிலர் அறிந்து கொண்டே வந்தார். அனைத்தும் ஆச்சர்யமாகவே
இருந்தது. முதலில் எட்டு வயதில் காடு படிக்க செல்லும் சிறுவர்கள். விலங்குகள், பறவைகள்,
தாவரங்கள், செடி, கொடிகள் என அனைத்தின் மீதும் ஆர்வம் கொண்டிரு்ககிறார்கள். மருத்துவத்தில்
முழு கவனம் செலுத்தி மூலிகைகளைக் கண்டற்நிதிருக்கிறார்கள். “அத்தாப்பொறுத்தி“ இலை அறுவை
சிகிச்சை செய்வது போல பிய்த்து எறிந்த சதையை ஒட்ட வைக்கிறது. இப்படி பாரியின் புகழோடு
பறம்புநாட்டின் புகழும் கபிலருக்கு வியப்பைத் தந்தது. பாரி கடம்ப மரத்தின்முன் நின்று
முருகனை வணங்கினான். எதிரரில் ஒருவன் வேகமாக இறங்கி வந்து குடநாட்டு அமைச்சர் கோளூர்ச்சாத்தன் வந்திருக்கிறார்
என்றான்.
வணிகம் செய்ய வந்த கோளூர்ச்சாத்தனை பாரி
கோபம் கொண்டு இயற்கையை வணிகம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை என்று விரட்டிவிட்டான்.
கபிலருக்கு அறுபதாங்கோழியின் கறி விருந்தாக பரிமாறப்பட்டது. கபிலர், உன்னோடு சேர்ந்து
கள் அருந்தும் நாள் தான் வாழ்வின் திருநாள் என்று நீலன் சொன்னான். பெருங்குவளை நிறைய கள் ஊற்றி அதை நீலனிடம் கொடுத்து
பாரி சொன்னான், உனக்கு கள் ஊற்றிக் கொடுக்கும் இந்நாள் தான் என் வாழ்வின் திருநாள்
என்று“
நீலன் மெய் சிலிர்த்துப் போனான். தேக்கன்,
கபிலருக்கு தோள் கொடுத்த பாரி, உனக்குத் தானடா கள் கொடுத்தான் என்று கூற, அவையே சிரிப்பில்
ஆழ்ந்தது. பாரி கேட்டான், முடியனை எங்கே?
பறம்பு நாட்டின் வட எல்லையில் கோளூர்ச்சாத்தன் கூட வந்த இருவரும் தோள்பட்டையைப்
பொத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் அங்கிருந்த பனைமர்ததில் தொங்க
விட்டுக்கொண்டிருந்தான் முடியன்…..
கதை
முயடியவில்லை தொடரும்……..
No comments:
Post a Comment