திறந்தவெளி மினிலாரி அது....
அதனுள் 10க்கும் மேற்பட்ட ஆண்கள்..
அனைவரும் நண்பர்கள்... அதுவும் திக் நண்பர்கள்...
ஒரே பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி படித்து, ஒரே ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள்...
அவர்களின் நட்பு அளவிடமுடியாதது... திக் நட்பு...
அவர்கள் இப்போது திறந்தவெளி மினி லாரியில் சென்று கொண்டிருப்பது திக்திக் பயணம்... வாருங்கள் அந்த பயணத்தில் அவர்களோடு சென்று வருவோம்......
வனக்காவலர்களிடம் அனுமதி பெற்று, மதிய உணவிற்கான அனைத்து பொருட்களுடன் அந்த அடர்ந்த காட்டில் சென்று கொண்டிருக்கிறது வாகனம். எப்போது எந்த விலங்கு வரும் யாருக்கும் தெரியாது அதனால் அந்த குறிப்பிடட எல்லை வரை மட்டுமே சென்று வாருங்கள் என்று வனக்காவலரின் எச்சிரிப்பினால் தான் லாரி இவ்வளவு மெதுவாக செல்கிறது. குட்டியானை தாய் யானையுடன் ஆடி அசைந்து செல்வதுபோல....
அனைவரின் இதயமும் அதிகப்படியான துடிப்புடன் காட்டின் உள்பகுதியை ஆச்சர்யமாக பார்த்து வருகிறது..
சூரியஒளி எவ்வளவு முயன்றாலும் தரையை முத்தமிட முடியாத அளவுக்கு அடர்ந்த மரங்கள்...
திடீரென்று ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ அமைதியா இருங்கள்... அங்கே கருப்பா... எதோ.... எல்லாரின் பார்வையும் அங்கே போக .... நாங்கள் கண்ட காட்சி இதுவரை யாரும் பார்த்திராத அற்புத காட்சி....
கபிலரும் பாரியும் எவ்வவியூர் மலையில் இருக்கும்போது இரண்டு பிளவுகளுக்கு இடையில் சூரிய ஒளிளைக் கண்டு கபிலர் வியந் துநின்றாரே அப்படி ஒரு காட்சி....
ஆம் ஒற்றை யானை... காட்டு யானை.... அந்தக் காட்டுக்குள்... அது ஓடிவந்தால் நாங்கள் அனைவரும் எமலோம்தான் .....அந்த பயத்தில் வண்டி மிக மெதுவாக சத்தமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது....
யானைக்கு ஒரு சின்னஹாய் அதுவே அறியாத அளவிற்கு சொல்லிவிட்டு அந்த குறிப்பிட்ட எல்லைக்கு சென்றோம்..
ஆற்றில் அளவிடமுடியாத அளவுக்கு தண்ணீர்...
ஒரே ஒரு பேருந்து மட்டும் அந்த ஊருக்கு வரும்.. மீண்டும் அதே பேருந்து அந்த ஊர் மக்களை ஏற்றிக்கொண்டு காட்டை விட்டு வெளியில் வரும்...
அதுவும் அந்த ஆற்றங்கரை வரைக்கும் தான்... அதன்பின் ஆற்றில் பரிசலில் கடந்து தான் அந்த ஊருக்குப் போகனும்...
அந்த ஊர்.... சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியான
தெங்கு மரஹடா......
சரி மகிழ்ச்சிப் பொங்கும் விஷயமல்ல இது.. ஆதலால் உடனே நிகழ்வுக்குள் சென்று விடுகிறேன்.
சில நாட்களுக்கு முன். அந்த தெங்கு மரஹடாவில் பணியிலிருந்த இளம் மருத்துவர் சிறுமுகையைச் சேர்ந்தவர் ஜெயமோகன்..... அந்த அடர்காட்டிற்குள் உயிரை பணயம் வைத்து அம்மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார்... காய்ச்சலால் இறந்தபோது அவரின் ஊரில் அவரை அடக்கம் செய்ய அவ்வூர் மக்கள் எதிர்க்கின்றனர். 29 வயது இளைஞர் அதுவும் மருத்துவர்... யாரும் செல்ல முடியாது காட்டில் பயணித்து மக்களுக்கு சேவை செய்தவருக்கு ஆறடி இடம் கொடுக்க அங்கு யாரும் இல்லை....
இதே போல் வடமாநிலத்தில் ஒரு செய்தி உலா வந்தது... மேகலாயா மாநிலத்தில் பெத்தானி மருத்துவமனையையே உருவாக்கி அம்மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் இதே நிலைதான்....
வட மாநிலம் சரி...
இது தமிழ்நாடு...
உணர்வினால் ஒன்றிணைக்கப்பட்டு
உள்ளத்தினால் இணைந்த தமிழர்களின் வாழ்விடத்தில்..... இப்படி ஒரு செய்தி...
வேள் பாரி..
கொல்லிக்காட்டு விதை.. எவர் கேட்டாலும் கொடுக்க கூடாது என்பது குலவழக்கம்... ஒரு பாணர் கூட்டம் கலையை பாரியின் முன்நிகழ்த்த... பாரி என்ன வேண்டும் என்று கேட்க.... பாணர்களின் வடிவில் வந்த ஒற்றர்கள் கொல்லிக்காட்டு விதையைக் கேட்கின்றனர்... ஒரு நிமிடம் பறம்புமலையே உணர்ச்சிவசத்தால் பொங்குகிறது....
தனுசின் படிக்காதவன் படத்தில் ரவுடியின் தங்கை உயிரைக்காப்பாற்றிய பின் உனக்கு என்ன வேண்டும் என்று தனுசிடம் கேட்பார் அநத ரவுடி தனுசும் உடனே உங்கள் தங்கச்சிதான் என்றவுடன் சுற்றியிருந்த அடிஆட்கள் கொந்தளித்து அடி பின்னி எடுப்பார்கள். அதேபோல்.... இது திரைப்படத்தில் நடக்கலாம்...
ஆனால் பறம்பிலும் நடந்தது... முல்லைக்கொடி கேக்காமலே வழங்கியவன் அல்லவா பாரி... கொல்லிக்காட்டு விதையைக் கொடுத்து அனுப்பினான்...
இப்படி உணர்வினாலும் கருணையாலும் கட்டப்பட்டது தமிழ்நாடு.. இங்கா இப்படியெல்லாம் நடக்கிறது... எவ்வளவு பெரிய வேதனை.... நானும் இப்போது வாழ்கிறேனே என்று நினைக்கும் போது ஒருவித அச்ச உணர்வே ஏற்படுகிறது...
இதோ அடுத்து சைமன்...நரம்பியல் மருத்துவர்... கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்து அவருக்கு் தொற்றி அவருடைய மகளும் தற்போது கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்குதான் ஆறடி இடம் கிடைக்கவில்லை....பலபேரின் ஆறடி இடத்திற்கு காலத்தைத் தள்ளிப்பபோட்டவர் அவருக்கு அடக்கம் செய்ய இடத்தை தரவில்லை அப்பகுதி மக்கள்.....
சரி விட்டுவிடுவோம்......
மனிதம் மலரும்..... அங்கு இன்னும் நோயாளிகளாகவே இருக்கிறார்கள்..
இருந்துவிட்டு போகட்டும்....
நோய் குணமாகும்.... பயம் எப்படி குணமாகும்... அது குணப்படுத்த நோய் அல்ல தூர வீச வேண்டிய குணம்... அது ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கும்.. அவர்களேதான் தூக்கி எறிய வேண்டும்.
இருக்கட்டும்... சாகாவரம் பெற்ற சகுனிகளே.... மரணம் அனைவரின் வாசலுக்கும் வரும்... கேட்காமலும் வரும்... அழைக்காமலும் வரும்.... கொஞ்சம் கவனமாகவே இருங்கள்...
சரி அவர்கள்தான்....என்ன செய்வார்கள்...
இருக்கும் இடம் அப்படி
“கீழ்ப்பாக்கம்”
அவர்களுக்கு போதிய விழிப்புணர்வையும் மருத்துவ அடிப்படை அறிவையும் கொரோனா வைரஸ் குறித்த பீதியையும் போக்குங்கள்.......
சைமன் சார் நிம்மதியாக போய் வாருங்கள்...
ஜெயெமோகன் நண்பா போய் வா....
இரண்டு பேரும் இன்னொருமுறை அவதாரம் எடுத்து எங்கள் தமிழ்நாட்டுக்கு வாருங்கள்... நாங்கள் நிறைய பேர் உங்களுக்காக இருக்கிறோம்.........
அங்கு உங்களுக்கு சொர்க்கலோகம் காத்துக் கொண்டிருக்கிறது....
இந்த மூடர்களின் கூடத்தில் இருந்து போவது எவ்வளவோ மேல்... ஆழ்ந்த இரங்கல்கள் இருவருக்கும்......
பாசமுடன்.... சகிபாலா....( பாலகிருஷ்ணன்)
No comments:
Post a Comment