Sunday, April 26, 2020

வேள்பாரியும் நானும் 5

வேள்பாரியும் நானும் 4
பறம்பு நாட்டின் வட எல்லையில்  கோளூர்ச்சாத்தன் கூட வந்த இருவரும் தோள்பட்டையைப் பொத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் அங்கிருந்த பனைமரத்தில் தொங்க விட்டுக்கொண்டிருந்தான் முடியன்…..
                                                  கதை முயடியவில்லை தொடரும்……..
வேள்பாரியும் நானும் 5
          இருள் விலகதாத கடைசி இரவின் இறுதியில் கபிலர் அசந்து தூங்கி கொண்டிருந்தார். வீரன் ஒருவரன் ஓடிவந்து “ பறம்பின் தலைவர் அழைக்கிறார்“ என்ற செய்தியுடன் முன்னால் நின்றான்.பாரியோடு கபிலரும் எவ்வியூரின் நடுவில் சென்று கொண்ருந்தனர்.பாரியிடமிருந்து வரும் வாசனையை முகர்ந்து கொண்டே உச்சிப்பறையை அடைந்தனர். இருவரும்.. தாழைப்பூவின் மணம், காய்ந்த ஆண் தாழைப்பூவின் இதழ்களுக்கு பூச்சிகளும் அண்டாது எனவே எப்போதும் எங்கள் உடன் இருக்கும். என்றான் பாரி.
          தொலைவில் தேர் ஒன்று செல்ல? கபிலர் பாரியைப் பார்க்க“ பறம்புமலையின் அத்தனை செல்வங்களும் பாழிநகரில் சேமித்து வைக்க செல்கின்றன. இந்த பாழிநகரைப் பாதுகாக்கும் பொறுப்பு  எங்களுடையது. என்றான் பாரி.
          இருகுன்றுகளுக்கும் இடையில் தீபம் ஏற்றியது போன்ற அற்புதக் காட்சியைக் கண்டுகொணுடிருந்தார் கபிலர். இரு பிளவுகளின் வழியே வெளிவந்த சூரியனின் ஒளி நேராக கபிலரின் மார்பில் பட கபிலர் இருகைகளையும் கூப்பி வணங்கினார். கபிலரின் கைகூப்பு காட்சியின் நிழல் எவ்வியூர் எங்கும் பரவியது. வானியல் பேராசான் திசைவேழர் இன்று நம்மோடு இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிக்கொண்டே கபிலர் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.
          திடீரென்று ஒரு கை அவரை மறித்தது. வலப்புறம் இடப்புறம் என்று மாறி மாறி மறித்தது. யாரம்மா நீ? கபிலர் கேட்க. மறித்தவளோ ” பாரியிடம் நட்பு கொள்ள தகுதி உண்டோ உம்மிடம்? என்று அதிரடியாகக் கேட்டாள் அவள்.
          கபிலர் அதிர்ந்து போனார். ஏனம்மா இப்படி கேட்கிறாய்?  எவ்வளவு பதற்றமான சூழ்நிலை வந்தாலும் கார்கால இரவுகளில் பாழிநகருக்குப் பாரி செல்லமாட்டான் தெரியுமா உமக்கு.
கபிலரிடம் பதிலில்லை.. கேள்விதான் கேக்கவில்லையே!... கபிலர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். கார்காலத்து இரவுகளில் மான்கள் இணைசேரும் தன் தேரின் ஒலி அதைக் கலைத்துவிடக்கூடாது என்பதால் தேரில் வரமாட்டான்.. பாரி.. ஆனால் உமது செயல் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது.
யான் செய்த பிழை என்ன  மகளே? ..
பூக்காடான என் காதலில் புயலை வீசச் செய்ததுதான் நீங்கள் செய்த பிழை. புரியும்படி சொல்.
உங்களால் தான் அவன் புகழின் உச்சியில் இருக்கிறான்.. என் கைகள் தழுவிக்கிடந்த  தோளில் இப்போது பாரியின் கைககள் தழுவுகின்றன. என் காதல் புகழலல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
கபிலருக்கு புரிந்தது. அவனின் காதலன் நம் செயலால் அவளிடமிருந்து கொஞ்சம் பிரிந்து பாரியிடம் ஒட்டிக்கொண்டான் போல.
நீ யாரைச் சொல்கிறாய்? உன் காதலன் யார்?
நீலன்.
நீலனின் பெருமையைக் கண்டு நீ மகிழத்தானே வேண்டும்.
எங்கள் குன்று எவ்வளவு வலிமை வாய்ந்தது தெரியுமா? யார் கண் பட்டதோ தெரியவில்லை.. அன்னொரு நாள் ஒரு தேர் வந்து நின்றது. என் மடி மீது கிடந்த நீலன் யாரோ ஒருவர் வேட்டுவன் பாறையில் கால் பதிக்கிறார். என்றேன். நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல நானே சொல்லி மாட்டிக்கொண்டேன். அன்று அது யார் என்று பார்க்கப்போனவன் வரவில்லை. வந்திருப்பவருக்கு காலில் அடிபட்டதால் நான் அவரை அழைத்துக் கொண்டு எவ்வியூர் செல்கிறேன். நீயுமு் வந்து சேர் என்று சொல்லிச் சென்றான்.
கபிலர் தன் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதோடு விட்டேனா? கால் ஒடிந்த ஒருவர் புலிவால் குகையில் இருப்பதைக் கேள்விபட்ட பாரி அக்குகைக்கே சென்று விட்டான். ஊரே நீலனின் புகழைத்தான் பாடுகின்றன. ஆனால் என் உதட்டுக்கு ஈடாகுமா? இவ்வுலகு? என்ன செய்யலாம் அவனை?
என்னிடமும் ஒருவன் இருக்கிறான்.. மயிலா… மயிலா என்று புலம்புகிறான். எனக்கு தெரியாமல் மலிலை மலரைப் பறித்துக் கொண்டு அவளைச் சந்திக்க புறப்பட்டு விட்டான். மயிலாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.. இன்னொரு நாளையும் இழக்க விரும்பாமல் ஓடோடி போனாள்.
மறுநாள் பாரியோடு கபிலர் பேசுகையில் நேற்று எவ்வியூரின் உச்சியில் இருந்தபோது இவ்வூரைச் சுற்றி கோட்டைகள் இல்லையே என்று நினைத்தேன் என்றார்.
பாரியோ.. கோட்டைகள் தான் இல்லை.. ஆனால் தாவரங்களும்… செடி கொடிகளும் தான் எங்களுக்கான பாதுகாப்பு அரண்கள். அதிலுள் ளஒரு மரம் யானைகள் கூட்டத்தையே விரட்டி அடிக்க கூடிய மணத்தை உடையது.
அது என்ன மரம்,
ஏழிலைப்பாலை
அந்த மரத்தின் வாசனையை நுகர்ந்தால் யானைகள் அலறி அடித்துக் கொண்டு ஓடும்.அந்த மரத்தின் வாசனையில் இன்னொரு அற்புதமும் இருக்கிறது.. காமத்தைத் தூண்டும் வசியம் அதனிடம் இருக்கிறது.. அதனால் தான் திசைக்கு ஒரு மரம் என்று விட்டு வைத்திருக்கிறோம்.
குலநாகினிகள் அடக்கும் நாகப்பச்சை வேலியும் பறம்பு மலைக்கு எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.
குலநாகினிகள் கூட்டம் வந்தது. அவர்களின் சத்தம் காட்டையே அதிரச் செய்தது…கொற்றவை விழா துவங்க போகிறது… அதன் தொடக்கம் தான் குலநாகினிகளின் வருகை...
இதோ கொற்றவை விழா தொடங்க இருக்கிறது….
கபலிரின் ஐயம் வெளிவந்தது.. கொற்றவை தெய்வம் பாலை நிலத்துக்கு உரியதுதானே? ஏன் குறிஞ்சி நிலத்தில் கொண்டாடப்படுகிறது?

பாரி—மூவேந்தரகளின் எதிரியாக மாற வைத்த அந்நத விலங்கு தான் கொற்றவை விழாவை ஆர்பிக்கும்…

அந்த விலங்கு…. எது?...... காத்திருங்கள்…. விலங்கு வந்து கொண்டிருக்கிறது….

Wednesday, April 22, 2020

கருப்புச்சட்டை கடவுளைத் தேடி அலைந்த கதை

ஒரு பத்து ரூபாய் பதிவுபோட்டிருந்தேனே அதன் தொடர்ச்சிதான்…. இந்த பதிவு….
கருப்புச்சட்டை கடவுளைத் தேடி அலைந்தேனே.. அந்த கடவுளின் தூதர்களுக்கு ஒருநாள் காலை உணவு அளிக்கலாம் என்று முந்தையநாள் சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட சாமான்கள் வாங்கி சேர்த்தாயிற்று…
பாசமிகு அண்ணன் செல்வன் நடுக்காலன்குடியிருப்பு பாத்திரம் செல்வம் அவர்களிடம் அவர் வீட்டிலிருந்த ஒரு கேஸ் அடுப்பையும் வாங்கி வீட்டில் வைத்தாயிற்று….. காலை 4மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்…
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று சொல்லக் கேள்விபட்டிருப்போம்.. இது அந்தவகையறா அல்ல… தனக்கு இருப்பதையே தானம் செய்வது…
தனக்கு மிஞ்சி தானம் செய்வதற்கு ரத்தன் டாடா அல்ல…
கஞ்சிக்கு கூட வழி இல்லாதவர்களுக்கு இருப்பதை வைத்து உதவி செய்ய நினைக்கும் ஏழைகளின் பித்தன்….
ஒருவேளை ரத்தன் டாடா வந்து…. நீங்கள் நன்றாக உதவி செய்கிறீர்களே… இதோ வைத்துக்கொள்ளுங்கள்… என்று நிரப்பபடாத செக்கைத் தந்து எவ்வளவு வேண்டுமோ நிரப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினால்…. இது நடக்காது ஒருவேளை நடந்தால்… அந்தச் செக்கில் பணம் நிரப்பும் இடத்தில் நான் நிரப்பும் தொகை……………………………“மனிதம்” அப்படித்தான் நான்….
மறுநாள் வழக்கம்போல் 4 மணிக்கு முழித்து அம்மாவை எழுப்பி வேலையை ஆரம்பிக்கலாம் என்று ஹாலுக்கு வருகிறேன்… அங்கே அம்மா காய்கறிகள் வெட்டிக் கொண்டிருக்கிறார்..
வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. உதவி செய்வதற்காக அம்மாவின் தோழி ஜெயாவும் வந்தாயிற்று,.. வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது… மணி ஏழு… நண்பர்கள் வந்துவிட்டார்கள். இட்லியை எடுத்து ஆட்டோவில் வைத்து கிளம்பியாயிற்று….
இப்போது எம் நண்பர்களைப் பற்றி சொல்ல வேண்டும். நிறையபேர் இப்படி தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள். கலீல்ரகுமான்..சுந்தர்… இரத்தினவேல்முருகன்…….
கலீல்ரகுமான்…. நாம் வேலைகளுக்கு இடையில் எப்பவாவது இப்படி உதவி செய்வோம்… ஆனால் இவர் இதையே வேலையாகச் செய்து கொண்டு அப்ப அப்ப வேலை செய்வார். ப்ரண்டஸ் ஆப்போலீசில் இருக்கும் அருமை நண்பர்.. திருவிழா காலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் இடத்தில் இவரைக் காணலாம்… மற்ற நாட்களில் ஏதேனும் உதவி என்று அழைத்தால் அடுத்த நிமிடம் உங்கள் அருகில் இருப்பார்.
சுந்தர்.
இவர் மருத்துவர்.. என்னுடைய பள்ளிகாலத்து நண்பர்.. அப்பவே ஆங்கில வழியில் படித்த படிப்புக்காரர். இப்போது ஜெய்கபீஷா என்று இயற்கை வழியில் மருத்துவம் செய்து மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்… இவரின் முகநூல் பார்த்தால் பெரிய பெரிய மருத்துவ விளக்கற்களுக்கு எளிமையான சொற்களில் பாமரமக்களுக்கும் புரியும் வகைளில் பேசிய காணொலிகளைக் காணலாம்..
மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தி தேர்வு பயம் அகற்றுபவர்.
இரத்தினவேல் முருகன்.
பள்ளிகாலத்து நண்பர். நேரமேலாண்மையைக் கடைபிடிப்பதில் கடிகாரத்திடமே போட்டியிடும் நண்பர்.
மூவரும் தற்போது நண்பர்களிடம் எதவி பெற்று உடன்குடியைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மூன்று வேளையும் உணவு தருகிறார்கள்.. இன்று நான் இணைந்தேன்.
அம்மா தயார் செய்த இட்லியுடன் சென்றோம். செல்லும் ஒவ்வொரு இடமும் ஒரு வரலாற்றை இயம்பியது… செல்லும் இடத்தில் உள்ள முதியவர்கள் இந்த ஆட்டோ சத்தம் கேட்டதும் எழுந்து கைகழுவ தயாராகிறார்கள். கைகளைக் கழுவியவுடன் தட்டில் இட்லி சாம்பார் சட்னியுடன் ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்துவிட்டு அடுத்த முதியவரைநோக்கி பயணம் தொடர்கிறது.
“ ரஜினி பாட்ஷா படத்தில் பாடுவாரே.. கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க… நீங்க தை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க…“ என்பதுபோல இந்த ஆட்டோ பசியிலிருப்பவர்களைக் கண்டால் தானாக நிற்கிறது.. அவர்களுக்கு உணவளிக்கிறது… எங்கள் பங்கும் சேர்ந்திருப்பதில் எங்களுக்கு ஈடில்லா மகிழ்ச்சி.
இன்னொரு தாத்தாவிடம் சென்றோம். தாத்தாவுக்கு இட்லி கொடுத்துவிட்டு திரும்புகையில் தாத்தா நாளைக்கும் இதே இடத்துல இருப்பீங்களா? வேற எங்கயாவது இருப்பீங்களா? என்று கேட்கிறோம்… இதே இடத்தில் இருக்கிறேன் என்று சொன்னவர்.. என்னைப் பார்த்து மருமகனே இங்கயே இருக்கிறேன் என்று சொல்லியபோது என் கண்களில் கண்ணீர் திரண்டது. நான் நினைத்துக் கொண்டேன்.. தாத்தா நீங்கள் பெற்றிருந்தால் சில மகன்கள் இருந்திருக்கலாம்.. ஆனால் இப்போது உங்களுக்கு பல மகன்கள் இருக்கிறோம்.. கவலையே படாதீர்கள் என்று நினைத்துகொண்டு அடுத்த இடம் நோக்கிச் சென்றோம்…. ஆட்டோவில் செல்லும்போது நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன… நாம் என்றாவது பட்டினியாய் இருந்திருக்கிறோமா? என்று நினைவிலே இல்லை.. பட்டினி கிடக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் பசி அறிவேன்.
பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் பள்ளியின் முன்னால் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு தாத்தா நாங்கள் சென்றதும் பசியில் இருந்திருப்பார் போல.. உடனே சாப்பிட தயாராகி விட்டார்.. அவருக்கு கொடுத்துவிட்டு செல்கையில் அவரின் கதையைக் கேட்டேன். எதிரில் உள்ள தெருவில் அவரது வளர்ப்பு மகளின் வீடு.. ஆனால் இவருக்கு அங்கு இடமில்லை. விரட்டி விட்டார்கள்.. பல சொத்துகளுக்கு அதிபதி. ஆனால் இன்று சாப்பாடு இல்லாமல் பேருந்துநிலையத்தில் இருக்கிறார்.. கண்களில் கண்ணீரோடு செல்கிறேன். அடுத்து ஒரு பாட்டி… நடக்கவும் நிற்கவும் முடியவில்லை.. அவரிடம் உள்ள பாத்திரத்தில் இட்லியையும் சட்னியையும் கொடுத்துவிட்டு திரும்புகிறேன்…
இதுவரையில் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் வழிய ஆரம்பிக்கிறது. ஆட்டோ நின்றவுடன் நான் பார்க்கிறேன்.. யாரும் இல்லை… என்ன நண்பா யாருமே இல்லையே… என்கிறேன். அதோ பார் நண்பா.. அந்த சுவற்றில் உள்ள பாத்திரத்தை எடுத்துவா என்கிறான்.. நான் அந்தச் சுவற்றில் பார்க்கிறேன். அதில் ஒரு சிறிய தூக்குச்சட்டியும், ஒரு தட்டும் இருக்கிறது. அதைப் பார்த்த உடன்தான் கண்ணீர் கசிய ஆரம்பித்தது. அவ்ளோ பேரைப் பார்த்து இட்லி கொடுக்கும் போது இல்லாத துக்கம் இந்த சுவற்றைப் பார்த்ததும் வந்தது..
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. அடுத்த தாத்தாவை நோக்கி நகர்கிறோம்.. அங்கே ஒரு குடும்பமே காத்திருக்கிறது. நடக்க முடியாத தாத்தா, பாட்டி, ஒரு மகள் அவர்களுக்கு தேவையான அளவு இட்லி, சட்னி சாம்பார் கொடுத்துவிட்டு ஆட்டோ தேரியூர் நோக்கி போகிறது. அங்கு ஒரு மனநலம் பாதித்த அண்ணன் காட்டுப்பகுதியிலிருந்து ஆட்டோவைப் பார்த்து வருகிறார். அவரின் கைகள் கழுவுவதற்கு தானாக நீள்கிறது… மணிச்சத்தம் கேட்டவுடன் உமிழ்நீர் சுரக்குமே பாவ்லவ் சோதனையில் அதேபோல்…. அவருக்கும் இட்லி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்…
உண்மையில் இன்று வாழ்வில் மகிழ்வான நாள். பசியிலிருப்பவர்களுக்கு உணவு வழங்குவது சரி.. ஆனால் மனநலம் பாதித்த அந்த அண்ணன், விரட்டிவிடப்பட்ட அந்த தாத்தா…. பார்க்க ஆள் இல்லாத தாத்தாக்கள்.. மருகமனே என்றழைத்த தாத்தா…. இப்படி இதைப்போல் இன்னும் எத்தனைபேர் இருப்பார்கள்.. அவர்களுக்க எல்லாம் யார் உணவு தருகிறார்கள்… கண்டிப்பாக யாரோ தருவார்கள்….
இதில் என்ன தெரியுமா? முதல்நாள் பார்த்த கருப்புச்சட்டை கடவுளை இன்று நான் பார்க்கவே இல்லை…. எங்களை இன்று உணவளிக்கச் செய்த அந்த கருப்புச்சட்டை கடவுளைக் காணவில்லை… கடவுளுக்கு ஆயிரம் வேலை இருக்கும்… ஆனால் அந்தக் கருப்புச்சட்டை கடவுளின் முகத்தை அத்தனை பேரிலும் பார்த்தேன்….. கடவுள் இருக்கார்… இதோ அவர்களைத்தான் சந்தித்துவிட்டு பசியாற்றிவிட்டு சென்று கொண்டிருக்கிறேன்.
உங்கள் பகுதியிலும் இப்படி சிலபேர் இருக்கலாம்.. அவர்களுக்கு ஏதோ உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்……
தலைமை தபால் நிலையத்தில் சேர்க்கும் தபால் உரிய நேரத்தில் உரியவரை உடனே சென்றடைவது போல்… நீங்கள் செய்யும் உதவி உடனு சென்றடையும்… எங்கே சென்றடையும்? அதையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?...
வாருங்கள் கரோனாவை விரட்டுவோம்…
அதற்கு முன் பசியை விரட்டுவோம்.......
ஆதம் திருப்தியோடு வீட்டுக்குள் நுழைந்தேன்… அம்மாவிடம் இன்னிக்கு நடந்ததைச் சொன்னேன்… புகைப்படங்களைக் காண்பித்தேன்.. வேலை இன்னிக்கு அதிகமாயிற்று என்னம்மா என்றேன்…
அதற்கு அம்மா……. நீ டெய்லி வாங்கித்தா!.... நான் செஞ்சித்தாரேன்…… சொன்னது அம்மா அல்ல!... அன்பு!.... நான் பார்த்த முதல் கடவுள்….

மருத்துவர் சிமசன் ஐயாவுக்கு அஞசலி

திறந்தவெளி மினிலாரி அது....
அதனுள் 10க்கும் மேற்பட்ட ஆண்கள்..
அனைவரும் நண்பர்கள்... அதுவும் திக் நண்பர்கள்...
ஒரே பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி படித்து, ஒரே ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள்...
அவர்களின் நட்பு அளவிடமுடியாதது... திக் நட்பு...
அவர்கள் இப்போது திறந்தவெளி மினி லாரியில் சென்று கொண்டிருப்பது திக்திக் பயணம்... வாருங்கள் அந்த பயணத்தில் அவர்களோடு சென்று வருவோம்......
வனக்காவலர்களிடம் அனுமதி பெற்று, மதிய உணவிற்கான அனைத்து பொருட்களுடன் அந்த அடர்ந்த காட்டில் சென்று கொண்டிருக்கிறது வாகனம். எப்போது எந்த விலங்கு வரும் யாருக்கும் தெரியாது அதனால் அந்த குறிப்பிடட எல்லை வரை மட்டுமே சென்று வாருங்கள் என்று வனக்காவலரின் எச்சிரிப்பினால் தான் லாரி இவ்வளவு மெதுவாக செல்கிறது. குட்டியானை தாய் யானையுடன் ஆடி அசைந்து செல்வதுபோல....
அனைவரின் இதயமும் அதிகப்படியான துடிப்புடன் காட்டின் உள்பகுதியை ஆச்சர்யமாக பார்த்து வருகிறது..
சூரியஒளி எவ்வளவு முயன்றாலும் தரையை முத்தமிட முடியாத அளவுக்கு அடர்ந்த மரங்கள்...
திடீரென்று ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ அமைதியா இருங்கள்... அங்கே கருப்பா... எதோ.... எல்லாரின் பார்வையும் அங்கே போக .... நாங்கள் கண்ட காட்சி இதுவரை யாரும் பார்த்திராத அற்புத காட்சி....
கபிலரும் பாரியும் எவ்வவியூர் மலையில் இருக்கும்போது இரண்டு பிளவுகளுக்கு இடையில் சூரிய ஒளிளைக் கண்டு கபிலர் வியந் துநின்றாரே அப்படி ஒரு காட்சி....
ஆம் ஒற்றை யானை... காட்டு யானை.... அந்தக் காட்டுக்குள்... அது ஓடிவந்தால் நாங்கள் அனைவரும் எமலோம்தான் .....அந்த பயத்தில் வண்டி மிக மெதுவாக சத்தமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது....
யானைக்கு ஒரு சின்னஹாய் அதுவே அறியாத அளவிற்கு சொல்லிவிட்டு அந்த குறிப்பிட்ட எல்லைக்கு சென்றோம்..
ஆற்றில் அளவிடமுடியாத அளவுக்கு தண்ணீர்...
ஒரே ஒரு பேருந்து மட்டும் அந்த ஊருக்கு வரும்.. மீண்டும் அதே பேருந்து அந்த ஊர் மக்களை ஏற்றிக்கொண்டு காட்டை விட்டு வெளியில் வரும்...
அதுவும் அந்த ஆற்றங்கரை வரைக்கும் தான்... அதன்பின் ஆற்றில் பரிசலில் கடந்து தான் அந்த ஊருக்குப் போகனும்...
அந்த ஊர்.... சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியான
தெங்கு மரஹடா......
சரி மகிழ்ச்சிப் பொங்கும் விஷயமல்ல இது.. ஆதலால் உடனே நிகழ்வுக்குள் சென்று விடுகிறேன்.
சில நாட்களுக்கு முன். அந்த தெங்கு மரஹடாவில் பணியிலிருந்த இளம் மருத்துவர் சிறுமுகையைச் சேர்ந்தவர் ஜெயமோகன்..... அந்த அடர்காட்டிற்குள் உயிரை பணயம் வைத்து அம்மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார்... காய்ச்சலால் இறந்தபோது அவரின் ஊரில் அவரை அடக்கம் செய்ய அவ்வூர் மக்கள் எதிர்க்கின்றனர். 29 வயது இளைஞர் அதுவும் மருத்துவர்... யாரும் செல்ல முடியாது காட்டில் பயணித்து மக்களுக்கு சேவை செய்தவருக்கு ஆறடி இடம் கொடுக்க அங்கு யாரும் இல்லை....
இதே போல் வடமாநிலத்தில் ஒரு செய்தி உலா வந்தது... மேகலாயா மாநிலத்தில் பெத்தானி மருத்துவமனையையே உருவாக்கி அம்மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் இதே நிலைதான்....
வட மாநிலம் சரி...
இது தமிழ்நாடு...
உணர்வினால் ஒன்றிணைக்கப்பட்டு
உள்ளத்தினால் இணைந்த தமிழர்களின் வாழ்விடத்தில்..... இப்படி ஒரு செய்தி...
வேள் பாரி..
கொல்லிக்காட்டு விதை.. எவர் கேட்டாலும் கொடுக்க கூடாது என்பது குலவழக்கம்... ஒரு பாணர் கூட்டம் கலையை பாரியின் முன்நிகழ்த்த... பாரி என்ன வேண்டும் என்று கேட்க.... பாணர்களின் வடிவில் வந்த ஒற்றர்கள் கொல்லிக்காட்டு விதையைக் கேட்கின்றனர்... ஒரு நிமிடம் பறம்புமலையே உணர்ச்சிவசத்தால் பொங்குகிறது....
தனுசின் படிக்காதவன் படத்தில் ரவுடியின் தங்கை உயிரைக்காப்பாற்றிய பின் உனக்கு என்ன வேண்டும் என்று தனுசிடம் கேட்பார் அநத ரவுடி தனுசும் உடனே உங்கள் தங்கச்சிதான் என்றவுடன் சுற்றியிருந்த அடிஆட்கள் கொந்தளித்து அடி பின்னி எடுப்பார்கள். அதேபோல்.... இது திரைப்படத்தில் நடக்கலாம்...
ஆனால் பறம்பிலும் நடந்தது... முல்லைக்கொடி கேக்காமலே வழங்கியவன் அல்லவா பாரி... கொல்லிக்காட்டு விதையைக் கொடுத்து அனுப்பினான்...
இப்படி உணர்வினாலும் கருணையாலும் கட்டப்பட்டது தமிழ்நாடு.. இங்கா இப்படியெல்லாம் நடக்கிறது... எவ்வளவு பெரிய வேதனை.... நானும் இப்போது வாழ்கிறேனே என்று நினைக்கும் போது ஒருவித அச்ச உணர்வே ஏற்படுகிறது...
இதோ அடுத்து சைமன்...நரம்பியல் மருத்துவர்... கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்து அவருக்கு் தொற்றி அவருடைய மகளும் தற்போது கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்குதான் ஆறடி இடம் கிடைக்கவில்லை....பலபேரின் ஆறடி இடத்திற்கு காலத்தைத் தள்ளிப்பபோட்டவர் அவருக்கு அடக்கம் செய்ய இடத்தை தரவில்லை அப்பகுதி மக்கள்.....
சரி விட்டுவிடுவோம்......
மனிதம் மலரும்..... அங்கு இன்னும் நோயாளிகளாகவே இருக்கிறார்கள்..
இருந்துவிட்டு போகட்டும்....
நோய் குணமாகும்.... பயம் எப்படி குணமாகும்... அது குணப்படுத்த நோய் அல்ல தூர வீச வேண்டிய குணம்... அது ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கும்.. அவர்களேதான் தூக்கி எறிய வேண்டும்.
இருக்கட்டும்... சாகாவரம் பெற்ற சகுனிகளே.... மரணம் அனைவரின் வாசலுக்கும் வரும்... கேட்காமலும் வரும்... அழைக்காமலும் வரும்.... கொஞ்சம் கவனமாகவே இருங்கள்...
சரி அவர்கள்தான்....என்ன செய்வார்கள்...
இருக்கும் இடம் அப்படி
“கீழ்ப்பாக்கம்”
அவர்களுக்கு போதிய விழிப்புணர்வையும் மருத்துவ அடிப்படை அறிவையும் கொரோனா வைரஸ் குறித்த பீதியையும் போக்குங்கள்.......
சைமன் சார் நிம்மதியாக போய் வாருங்கள்...
ஜெயெமோகன் நண்பா போய் வா....
இரண்டு பேரும் இன்னொருமுறை அவதாரம் எடுத்து எங்கள் தமிழ்நாட்டுக்கு வாருங்கள்... நாங்கள் நிறைய பேர் உங்களுக்காக இருக்கிறோம்.........
அங்கு உங்களுக்கு சொர்க்கலோகம் காத்துக் கொண்டிருக்கிறது....
இந்த மூடர்களின் கூடத்தில் இருந்து போவது எவ்வளவோ மேல்... ஆழ்ந்த இரங்கல்கள் இருவருக்கும்......
பாசமுடன்.... சகிபாலா....( பாலகிருஷ்ணன்)

பத்து ரூபாய் பதிவு

ஒரு பதிவுக்கு 2 ரூபாயாமே அப்படியா? அப்படி ஒரு செய்தி கேள்விபட்டேன்.... சரி அது இருக்கட்டும்....
இது பத்து ரூபாய் பதிவு ..........
பைக்கில் போய்க்கொண்டு இருந்தேன்... பல சிந்தனைகளோடு...
கடைகளெல்லாம் அடைத்துக் கிடந்தன.
சாலைகளில் பங்குனி வெயில் பல்லைக் காட்டியது...
முககவசம், கண்ணாடி அணிந்திருந்தேன்..
பரபரப்பாக இருக்கும் வேளை
ஓரிருவரைத் தவிர சாலையில் எவரும் இல்லை....
எப்போதும் சாலையில் வரும் மனநிலை சரியில்லாத அந்த அண்ணன் கருப்பு பேண்ட், சட்டை சகிதம் எதிரில் தூரமாக வந்துகொண்டிருந்தார்...
உடன்குடியில் பலபேர் பல தடவை பாத்திருப்போம்....
எப்பவும் கையில் ஒரு சாக்குப்பை வைத்திருப்பார்...
ஏதேனும் சொல்லிக்கொண்டே சாலையில் செல்வார்..
அவரேதான்... அவரேதான் தொலைவிலே கண்டு கொண்டேன்.....
இரண்டு பேர் அவரின்
எதிரில் எனக்கு முன்னால் நடந்து சொன்று கொண்டிருந்தார்கள்.. அவர்கள் அந்த அண்ணனிடம் வரும்போது அவர் கையை நீட்டி காசு கொடு என்றார்.
அவர்கள் கண்டுக்கவே இல்லை...
அடுத்து மிதிவண்டியில் செல்பவரை மறிப்பதுபோல் கை நீட்டி காசு கேட்டார்..
அவரும் கண்டு கொள்ளவே இல்லை...
இப்போது நான் அவர் அருகில் பைக்கில்.... நான் கையை நீட்டுவார்.. அதனால் பையைத் துழாவினேன். பணம், பர்ஷ் எல்லாம் அப்போதுதான் வீட்டில் வைத்துவிட்டு வந்திருந்தேன். அய்யோ வச்சிட்டு வந்துட்டோமே என்று கவலைப்பட்டுக் கொண்டே அவர் கையை நீட்டுவார் நாமும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுவோம் என்று தீர்மானித்து சென்று கொண்டிருந்தேன்...
அவரருகில் போயும் என்னைப் பார்த்து கையை நீட்டவே இல்லை... அவர் பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தார். எனக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது..
நடந்து சென்றவர்களிடம்,
சைக்கிளில் சென்றவரிடம் காசு கேட்டதைக் கண்ணால் பார்த்தேன். ஆனால் பைக்கில் சென்று கொண்டிருந்த என்னை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை..
ஒருவேளை வேகமாக வருகிறார் என்று நினைத்திருப்பாரோ.....
நான் அவ்வளவு வேகமும் இல்லை.... மெதுவாதான் வந்தேன்.....
அவர் என்னைக் கடந்து சென்று விட்டார்..
நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.. எனக்குள் என்னவோ செய்தது...
அவர் என்னிடம் ஏன் கேட்கவில்லை.... என்னிடம் பணம் இல்லை என்பதைக் கவனித்து விட்டாரோ? வாய்ப்பில்லை....
பைக்கில் வருபவர்கள் தரமாட்டார்கள் என்று எண்ணியிருப்பாரோ...
இல்லையெனில் முககவசம் கண்ணாடி அணிந்து சென்றதால் இவர்கள் எல்லாம் தரவே மாட்டார்கள் என்று எண்ணியிருப்பாரோ? பல சிந்தனை...
மனைவி என்னாச்சு ? என்றார்.. நான் இப்படி இப்படி என்றேன்...
சரி என்று பர்சைத் துழாவினேன். அதற்குள் மனைவியிடமிருந்து பத்து ரூபாய் உடனே கிடைத்தது.
வாங்கிக்கொண்டு மீண்டும் அதே சாலையில் வருகிறேன்.. அந்த அண்ணனைப் பார்த்த இடத்தில் அவரில்லை... அய்யோ என்று மனம் பதறியது... அவர் சென்ற சாலையில் மிக வேகமாக சென்று பார்க்கிறேன்.. எங்கும் இல்லை... பக்கத்தில் பிரிந்து சென்ற இன்னொரு சாலையில் சென்று பார்க்கிறேன். அங்கும் இல்லை.. அட அதற்குள் எங்கே சென்று விட்டார் என்று சோகமாக திரும்பிய வேளையில் ஒரு நீண்ட தெருவிற்குள் கருப்புச்சட்டை அணிந்து கையில் பையுடன் அந்த அண்ணன் செல்கிறார்... கூர்ந்து கவனித்தேன்...
அவர்தான்.. அவருதான்.. அவரேதான்.... வேகமாகச் சென்று அவரின் கையில் பத்துரூபாயைத் திணித்தேன் ... ஏற்கனவே இரண்டு சில்லறை நாணயங்கள் அவரிடம் இருந்தன... பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு அவரின் முகத்தைப் பார்க்கிறேன்...
ஆளைமயக்கும் அற்புத புன்னகை.... அதோடு விட்டாரா?
என்ன இன்னும் வீட்டுக்கு போகலாயா? என்று அதட்டும் குரலில்......
வீட்டுக்கு வந்துவிட்டேன் நான்... ஆனால் மனது அவரைப்போல் எத்தனைபேர் இப்படி கஷ்டப்படுகிறார்களோ... அவர்களுக்கு யார் சாப்பாடு தருவார்கள் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்......
இதோ முடிவே பண்ணிட்டேன்... நண்பர்கள் சிலர் இவர்களுக்கு காலை உணவு தருகிறார்கள்.. அவர்களிடம் நாளை ஒருநாள் எங்கள் வீட்டில் தயார் செய்து அனைவருக்கும் தருகிறேன்... எவ்வளவு என்று கேட்டேன்.... 120 இட்லி தண்ணீர் பாட்டில்... சாம்பார் சட்ணி ஆகிறது... என்றான் நண்பன்..
நாளை வீட்டிலே தயார் செய்து சாம்பார் சட்னி, தண்ணீர் பாட்டில் எல்லாம் அவர்கள் இருக்கும் இடத்திலே தருகிறேன்.. நண்பா என்றேன்...
கொஞசம் மனப்பாரம் இறங்கியிருக்கிறது....
நாளை அவர்களுடன் இருப்பேன்...
இட்லியோடு..... வருகிறீர்களா? வாருங்கள்.
ஒரு வேளை உணவு அளிப்போம்.... கொரோனவினால் இன்று பலபேர் பட்டினியாய் இருக்கிறார்கள்....
அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல் இப்போது அவசியம்.... ஊரடங்கு முடிந்தவுடன் வேண்டுமானால்
“ஆங்கு ஓர் ஏழைக்கு அல்ல“ பல்லாயிரம் பேருக்கு எழுத்தறிவிப்போம்.....
பாசமுடன்
சகிபாலா ( பாலகிருஷ்ணன்)