Saturday, March 28, 2020

GOOD WILL HUNTING ம் காதல் கொண்டேன் ம்


GOOD WILL HUNTING ம் காதல் கொண்டேன் ம்
1997ல் வெளிந்த ஆங்கில மொழியில் உள்ள அமெரிக்கபடம்.. குட் வில் ஹண்டிங்… 2003ல்வெளிவந்த தமிழ்ப்படம் காதல் கொண்டேன்.
            இரண்டும் கிட்டதட்ட ஒரே கதையமைப்பைக் கொண்டவைதான்..திரைக்கதை வேண்டுமானால் மாற்றி அமைத்திருக்கிறார்கள் போல. முதலில் குட் வில் ஹண்டிங் பற்றி பார்ப்போம்.
            முதலில் ஒன்று சொல்லி விடுகிறேன். தயவுசெய்து படித்து முடித்ததும். படத்தைப் பாருங்கள்.. லிங்க் அனுப்புகிறேன்.
            மொழிச்சிக்கல் உள்ளவர்கள் இருமுறை பார்த்தால் எளிதில் புரியும்.
1997இல் வெளிவந்த குட் வில் ஹண்டிங் என்ற திரைப்படத்தின் கதாநாயகன் வில் ஹண்டிங் எப்படி குட் வில் ஹண்டிங் காக மாறுகிறான் என்பதுதான் கதை. சிறுவயதிலேயே அநாதையான வில் ஹண்டிங் மாற்றுத்தந்தையால் வளர்க்கப்பட்டு கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறான். பெரியவனாகியதும் பிரபலாமான கல்லூரியில் குப்பைக் கூட்டும் வேலை செய்கிறான். அக்கல்லூரியின கணித பேராசிரியர் அமெரிக்காவின் உயரிய விருதைப் பெற்றவர். அவர் ஒரு நாள் வகுப்பறையில் கணிதப்பாடம் நடத்திவிட்டு வெளியில் உள்ள கரும்பலகையில் ஒரு சிக்கலான கணக்கினை எழுதவைத்து இதை யார் தீர்ப்பீர்கள் என்று பார்க்கிறேன். என்ற சின்ன சவாலை மாணவர்கள் முன் வைக்கறார். அன்று குப்பை கூட்ட வந்த வில் ஹண்டிங் இதைப் பார்த்து உடனே அந்தக் கணக்கை செய்து முடித்து விடுகிறான்ஃ அடுத்த நாள் பேராசிரியருக்கோ ஆச்சர்யம்.. வகுப்பறையில் கேட்கிறார். யார் என்று . ஒருவரும் கை தூக்கவில்லை.. மறுநாள் இதைவிட சிக்கலான இன்னொரு கணக்கை எழுதி வைக்கிறார். அன்றும் வில் ஹண்டிய் அதைத் தீர்த்து விடுகிறான். கடைசி நேரத்தில் இதை பேராசிரியர் பார்த்து வில் ஹண்டிங்கை அழைக்கிறார். அவன் நைசாக வெளியேறிவிடுகிறான்.
               அவனுக்கு இரண்டு நண்பர்கள் அவர்களுடன் ஊர்சுத்துவது. பாரில் குடிப்பது.. விளையாடுவதுதான் அவனது பொழுதுபோக்கு.. அப்படி ஒருநாள பாரில் குடிக்கும்போது சைலா என்ற பெண்ணைப் பார்த்து பேசுகிறான். இருவரும் நண்பர்களாகிறார்கள்.
               இதற்கிடையில் அங்கு நடந்த ஒரு அடிதடியில் வில் ஹண்டிங் போலீஜின பிடியில் சிக்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறான். அவனிடம் விசாரணை நடத்தும்போது இவனே நான் விடுதலையாக இநத்தச்சட்டப்புத்தகத்தின இத்தனையாவது பக்கத்தில் இந்த ஷரத்து இருக்கிறது. அதனால் என்னை விடுங்கள் என்கிறான். நீதிபதிக்கே ஆச்சர்யம். இந்தச்சிறுவனுக்கு சட்டப்பதுக்கம் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருக்கிறது என்று ஆனாலும் அவனை சிறையில் தள்ள உத்தரவிடுகிறார். பின்னர் அவன பேராசிரியர் அவனை உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அவனை வெளிக்கொணருகிறார். பேராசிரியருடைய உளவியல் நண்பரைச் சந்தித்து வில் ஹண்டிங் பற்றி கூறி அவனை சரிபண்ண வேண்டும். அவன ராமானுஜர் போல கணக்குகளை அசாத்தியமாக போடுகிறான். ஏகப்பட்ட திறமைகள் வாய்ந்தவன் என்று கூறி உளவியல் நண்பருடன் வில் ஹண்டிங்கைச் சந்திக்க வைக்கிறார்.
               ஆனால் வில்லியம் ஹண்டிங் அவரை உதாசீனப்படுத்துகிறான். இத்போல் எல்லாரையும் உதாசீனப்படுத்துகிறான். ஆனாலும் உளவியல் நண்பர் எப்படியும் இவன் வழிக்கு வருவான் என்று நம்பிக்கையில் அவனிடம் பேசுகிறார். ஒரு கட்டத்தில் இவர் அவனை உதாசீனப்படுத்துகிறார்.. நண்பர்களும் ஒரு நாள் நாங்கள் உன கூட இருப்பது மகிழ்ச்சிதான் .ஆனால் எங்களுக்கு சந்தோசம் எது  தெரியுமா? நாங்கள் உன்னைத்தேடி வரும்போது உன் வீடு பூட்டிக்கிடக்க வேண்டும். எதோ ஒரு வேலையில் நீ உன்னை ஈடுத்தியிருந்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
உளவியல் நிபுணரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவரின மனைவியைப பற்றி ஏதோ சொல்ல அவர் அவன கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். அவனும் அதை பெரிய விசயமாக எடுத்துக்அகாள்ளாமல் வெளியேறிவிடுகிறான். மீண்டும் வரும்போது தன் குடும்பத்தைப் பற்றியும் தன் குடிகார தந்தையிடமிருந்து எப்படி தன் அம்மாவையும், தன் தம்பியையும் காப்பாற்றுவேன் என்று கூறும்போது நமக்கு அழுகையே வந்துவிடும். இதுதான் முக்கிய காட்சி.. இவர் இப்படி சொன்னவுடன் வில் ஹண்டிங் நானும் சின்னவனாக இருக்கும் போது என் தங்கையைக் காப்பாற்ற இப்படி தான செய்திருக்கிறான். சிகரெட்டை வைத்து சுடுவார்கள். பல கொடுமைகளைச் செய்வார்கள். அதனால் எனக்கு எல்லாரையும் பிடிக்காமல் போகிறது. எல்லாரும் என்னை உதாசீனப்படுத்துவார்கள். நானும் யாரிடமும்சேராமல் தனியாகவே இருப்பேன். என்று சொல்லி அழுதுவிடுவான். உடனே பேராசிரியர் அவனைக் கட்டிப்பிடித்து.. it’s not your fault. என்று சொல்லி அவனைத தேற்றுவார்.. I know.. I know.. I know  என்று சொல்லிக்கொண்டே அழுவிடுவான். ஆசையாக காதலித்து கட்டிய மனைவி ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாள். அவளுக்காக எதையும் செய்வேன். நான். என்னுடைய வேலையையும் விட தயாராக இருந்தேன்.. எப்பவும் அவளை மிஸ்பண்ணவே மாட்டேன். என்று அவரின் மனைவியைப் பற்றி கூறிவிட்டு உனக்கு இப்படி யாராவது இருக்கிறார்களா? என்று கேட்கிறார். உடனே  வில் ஹண்டிங் தன் தோழி சைலாவை நினைத்து கொள்கிறான். அவளிடம் கூடுதலாக அன்பு காட்டுகிறான்.
               இறுதிக்காட்சியில் உளவியல் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதி அவரின் வீட்டுவாசலில் வைத்துவிட்டு போயிருப்பான். அந்தக்கடிதத்தில் பேராசரியருக்கு தெரியப்படுத்துங்கள் நான் கண்டிப்பாக ஒரு வேலைக்கு போவேன். ஆனால் அதற்கு முன் என் சகியைப் பார்க்க போகிறேன். என் வாழ்வில் ஈடு இணையற்றவளை மிஸ் பண்ண விரும்பவில்லை.. ஆகையால் நான் கேம்பிரிட்ஜ் போகிறேன். என்று எழுதியிருப்பான். அதைப படித்த உளவியல் நண்பர் அவருக்கு இது ஒரு விசயமே இல்லை என்று நினைப்பவர். கணக்கில் புலி, பணம் பிரச்சினையே இல்லை. ஆனாலும் அவனிடம் அன்பு காட்டிய அவனது சைலாவை மிஸ் பண்ண விரும்பவில்லை. இதைப் பார்த்த உளவியல நண்பருக்கும். மகிழ்ச்சி… பேராசிரியருக்கும் மகிழ்ச்சி.. வில் ஹண்டிங்கா இருந்தவன் குட் வில் ஹண்டிங்கா மாறிட்டான்..
               காதல் கொண்டேன் கதையைப் போல இருக்குல்ல… நீஙக்ளே பாருங்களேன். இரண்டு படத்தையும்.. வாழ்வில் ஒருநாள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
               எனக்கு பிடித்த இடம் எது தெரியுமா? உளவுத்துறையில் வேலைக்கு சேருகிறாயா என்று கேட்கும்போது.. நான் சேர்ந்து எதிரிகளின் இருப்டத்தைக் கண்டறிந்து தருவேன் நீங்கள் எதிரிகளை அழிப்பதோடு கூட இருக்கும் அப்பாவிகளையும் அழிப்பீர்கள் நான அந்த வேலைக்கு வரலப்பா என்று சொல்வான். தன்னைப்போல் பிறரை நேசி என்பார்களே அதைப்போல் அப்பாவி மக்களை தன் மக்களாக கருதுவான் வில் ஹண்டிங். அதுதான் என் குணமும்..
இப்படி ஒருவனின் வெற்றிக்கு  பின்னால் ஒரு பேராசிரியேரோ ஆசிரியரோ நண்பர்களோ பெற்றோரோ தோழியோ மனைவியோ தங்கையோ அண்ணனோ இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் குட் வில் ஹண்டிங் திரைப்படம் சமர்ப்பணம்.
https://youtu.be/mhwTURPuf4c லிங்க்.. குட் வில் ஹண்டிங் திரைப்படம்.
https://www.youtube.com/watch?v=ALVNTLm8Xd0  காதல் கொண்டேன் திரைப்படம்.
பார்த்து ரசியுங்கள்…

மு.பாலகிருஷ்ணன், எம்.ஏ.,பிஎட்., டி.டி.எட்.,
பட்டதாரி ஆசிரியர் ( தமிழ்)
எஸ்.எஸ்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி,
கொம்மடிக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம்.
அலைபேசி 8248340305  புலனம் 9698995853
 Mail id – muthubala1984@gmail.com
                        

No comments:

Post a Comment