Monday, March 30, 2020

பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாள்


பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாள்…. செல்வி.ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள்.
ஜெ.ஜெ. என்று இரட்டை எழுத்துகள் இந்திய அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கவைத்து தன் வசீகர ஆளுமையால் உலகையே கட்டிப்போட்ட ஆகச்சிறந்த ஆளுமை நிறைந்த இரும்பு பெண்மணி செல்வி.ஜெ.ஜெயல்தாவின் பிந்தநாள் இன்று. இது சாதரணமான நாள் இல்லை தமிழ்நாட்டுக்கு ஏன் இவ்வுலகிற்கு.. ஆணாதிக்க சமுதாயம் வழிவழி வந்த ஒரு நாட்டில் ஒரு பெண்ணாக, நாட்டின முதல்வராக, பிரதமருக்கும் போட்டியாக நின்று இவ்வுலகை திரும்பிப் பார்க்க வைத்தவரென்றால் இதுவொன்றும் பழம் நழுவி பாலில் விழுந்த கதை அல்ல. இரும்பு படுக்கையில் ஏறி காலில் இரத்தம் வடிய நடந்து பல இன்னல்களையும் அவமானங்ளையும் தாங்கி வெற்றிப்பாதையில் வலம் வந்தவரின் கதை. தி.மு.கவில் இருந்து அதி.முக. பிரிந்தபோது இனி எம்.ஜி.ஆர் அவ்வளவுதான் நடித்துக்கொண்டே காலத்தை ஓட்வேண்டியதுதான் என்று உலகமே பேசியபோதுதான் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நுனிநாக்கு ஆங்கிலத்தாலும் அசர வைக்கும் பேச்சாற்றலாலும் பட்டிதொட்டியெங்கும் அதிமுகவின கொள்கைகளை எடுத்துச்சென்றார். ஆணாதிக்கம் நிறைந்த உலகில் இது சாத்தியப்படுமா? எத்தனை முட்டுக்கட்டைகள், எத்தனை அவமானங்கள், எத்தனை இழப்புகள் இவ்வளவு ஏன் எம்.ஜி.ஆர் இறந்த போது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டவர்தான்,  சட்டமன்றத்தில் அத்தனை ஆண்களும் சேர்ந்து அவமானப்டுத்தும்போது அவமானத்தைப் பொறுத்துக்கொண்டு அதே சட்டமன்றத்தில் அத்தனை ஆண்களின் முதுகெலும்பையும் குனியவைத்தவர் அல்லவா!. எப்பேர்பட்ட ஆளுமை..
               நாம் இன்று மைபெருங்காப்பியங்கள் என்று சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்று சொல்லிவட்டு பள்ளிப்பாடபுத்தகத்தில் குண்டலகேசியையும், வளையாபதியையும் சொல்லாமல் விட்டுவிடுகிறோமே.. சிலப்பதிகாரம், மணிமேகலை அளவிற்கு அதன் புகழ் பரப்ப படவில்லையே ஏன்? அன்றே ஒரு பெண் ஆண் தன்னைக் கொல்ல வந்தால் அவனைக் கொல்லும் தைரியம் படைத்தவள் என்பதை எப்படி ஆணாதிக்க சமுதாயம் சொல்லிக்கொடுக்கும். அவளை காப்பி போடுவதற்கும் கால் அமுக்குவதற்கும் அல்லவா வைத்திருந்தது. அத்தைனையையும் உடைத்து முதல் மகளிர காவல் நிலையத்தை கொண்டு வந்து மகளிர் காவலர்களை நியமித்த பெருமை அம்மாவையே சாரும். பெரியார் என்ற ஒற்றை வார்த்தை மகளிரை எல்லாம் இவ்வுலகிற்கு வெளிக்கொணர வைத்த து என்றால். ஜெ.ஜெ. என்ற இரட்டை வார்த்தைகள் அமடமகளிரின வாழ்வில் தன்னம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களால் பல்வேறு துறைகளில் வர முடிகிறதென்றால் அதற்கு ஜெ.ஜெ. என்ற தைரியமிக்க பெண்மணியின் வழிகாட்டலால் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்றைய தினத்தில் பெண்களும் பெண்குழந்தைகளும் எடுக்க வேண்டிய உறுதிமொழி ஒன்றுதான்..பெண்ணாக பிறந்த காரணத்தால் நமக்கு கிடைத்த வாழ்க்கை இதுதான் என்று எண்ணிவிடக்கூடாது. ஆண் பெண் என்ற பேதம் எங்கும் கூடாது. குழந்தைப் பெற்றெடுக்கும் ஒன்றில் மட்டுமானால் நீங்கள் பெண்கள் என்று நிரூபியுங்கள். மற்ற அனைத்திலும் ஆண்களுக்கு ஈடாக முன்னேறிடுங்கள். இந்தச் சமூகம் ஆதிக்க சமூகம் உங்களை முடக்க அனைத்து வழிகளையும் பின்பற்றும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்.. கற்களை எடுத்து அடித்தால் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.. பூக்களை எடுத்து அடித்தால் உங்கள் புன்னகையால் அதற்கு பதில் சொல்லுங்கள். மறுபடியும் அடித்தால் நீங்கள் பூந்தொட்டியைத் தூக்கி அடியுங்கள். அடி வாங்குவதற்கும் ஒரு அளவிருக்கிறது.
               அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் அறியாமைதான் ஆண்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் அதைப்பயன்படுத்தியே உங்களை வசப்படுத்தி விடுவார்கள்.. பெண்மை என்னும் மென்மை குணத்தால் நீங்களும் அடிமையாகிப்போவீர்கள். ஆதலால் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்..
செல்வி.ஜெ.ஜெயலலிதா என்னும் ஆகச்சிறந்த ஆளமையின் பிறந்தநாள் பெண்குழந்தைகள் பாதுகாப்பு நாளா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் குட்டச்.. பேட்டச்… சொல்லிதர வேண்டாம்.. டோண்ட் டச் என்று சொல்லித்தாருங்கள். பெண்குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிகளை தன் ஆண்குழந்தைகளுக்கு சொல்லித்தாருங்கள். பெண் என்பது போகப்பொருள் அல்ல என்பதை நிரூபியுங்கள். உங்கள் உடைகள் ஆண்களுக்கு இச்சையைத் தருகிறது என்றால் மாற்ற வேண்டியது உடையை அல்ல அந்த ஆண்களின் எண்ணங்களை. ஏனென்றால் இங்கு பச்சிளம் குழந்தைகள் முதல் பல் போன பாட்டிகள் வரை இங்கு பாலியல் துன்புறுத்தப்படுகிறார்களே ஆக.. இங்குஆடை பிரச்சினை அல்ல. மாற வேண்டியது, மாற்றப்பட வேண்டியது ஆணாதிக்கம்.. ஆண்கள் ஒவ்வொருவரும் பெண்களை நம் சகோதரிகளாக அன்னையாக நினைக்க சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.
               இதையும் மீறி குழந்தைகளை பாலியல் வன்முறைகள் செய்கிறார்கள் என்றால் அப்படிப்பட்ட சைக்கோக்களை நடுரோட்டில் என்கவுண்டர் செய்ய வேண்டும்.. தண்டனைகள் அதிகமானால் தவறுகள் குறையும்.. ஆக இந்நாளில் உறுதிமொழி எடுங்கள் ஆண்களே எந்த பெண்களுக்கும் எந்த குழந்தைக்கும் என்னால் எவ்வித தீங்கும் நேராது அதே நேரத்தில் மற்றவர்களால் தீங்கு ஏற்படுத்தவும் விடமாட்டேன்.. என்று உறுதி மொழி எடுங்கள்.. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தில் ஆண்களே உறுதி மொழி எடுக்க வேண்டும்.. நான் எப்பவோ எடுத்து விட்டேன்.. நீங்கள்.. ஹலோ… உங்களைத்தான். கொஞ்சம் உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்களேன் ப்ளீஸ்… எங்களுக்கும் பெண்குழந்தைகள் இருக்கிறது. உங்களை நம்பித்தான் இந்தச சமுதாயத்தில் அவளை நடமாட விட்டிருக்கிறேன்… அதை விட அவளுக்கு தற்காப்பும் சொல்லித் தந்திருக்கேன் என்பது தனிக்கதை….
மக்களால் நான்.. மக்களுக்காக நான்…
உங்களால் நான்.. உங்களுக்காக நான்..
நம்மால் நாம்… நமக்காக நாம்…
பெண்களை பாதுகாப்பீர்கள்தானே!.... செய்வீர்களா!... செய்வீர்களா!.... உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

No comments:

Post a Comment