Monday, March 30, 2020

திருமண வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் இருவருக்கும்..... இல்லற வாழ்வில் இனிமையான வாழ்வு அமைய இறைவனை வேண்டுவேன்......

உங்களுக்கு ஒன்று என்றால் அவளிடமும் அவளுக்கு ஒன்று எனில் உங்களிடமும் மனம்விட்டு பேசி தீர்த்துவிடுங்கள்...

இதைச்சொன்னால் தப்பா நினைப்பாங்களோ என்று இருவருமே எண்ணக்கூடாது...

எது என்றாலும் நான்கு சுவர்களுக்குள் தீர்த்துவிடுங்கள்.... ஊடல் வராது என்று சொல்ல மாட்டேன்... வரும்...

நிறைய தட்டிக்கொடுத்தலும் அதிகமான விட்டுக்கொடுத்தலும் உங்கள் இல்லற வாழ்வை இன்னும் அழகாக்கும்....

ஊடல் அவசியம்...
*ஊடல் இருந்தால் கூடல் கூடகொஞ்சம் நிகழும்*..

அனுபவித்து பாருங்கள் சொன்னது உண்மை என்று உணர்வீர்கள்..

*அன்றைய ஊடல் இரவின் இடைவிடாத முனகல்களால் முற்றுப்பெறட்டும்...*
எக்காரணம் கொண்டும் அடுத்தநாள் தொடரவே கூடாது.... எது செய்தாலும் அவளின் ஐடியாவையும் கேளுங்கள்...

அவள் என்ன புது ரெசிப்பி செய்தாலும் அதை வாழ்வில் இப்படி சாப்பிட்டதே இல்லை என்று அவளின் ரெசிப்பியை அகில உலக அளவில் புகழ்ந்திடுங்கள்....

பல நேரங்களில் பல லட்சம் செலவு செய்து வாங்கிகொடுக்கும் பொன்நகைககளின் இடத்தை 100 முழம் மல்லிகைப்பூ முப்பது ரூபாயில் உச்சகட்ட இன்பத்தை தரும்.. தெரிந்து கொள்ளுங்கள்....

வெளி இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள்.. மேற்படிப்புக்கு வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக படிக்க வையுங்கள்.. அதற்கு தகுந்தாற்போல் பிளான் பண்ணிக்கோங்கள்...
அடிக்கடி தொடர்பில் இருங்கள்... ஆப் லைனில் இல்லையென்றாலும் ஆன்லைனில் எப்பவும் தொடர்பில் இருங்கள்....
ஊடலும் கூடலும் உங்கள் வாழ்வை செம்மையாக்கும்...
அண்ணனின் வாழ்த்துக்கள்....
முக்கியமான செய்தியை தவறவிட்டுவிட்டேன்
* குழந்தைகள் தினம் நவம்பர் மாதம் 14* நினைவில்கொள்......

வாழ்த்துக்கள் இருவருக்கும்......
அன்புடன்………. சகிபாலா.....


No comments:

Post a Comment