என்றுமில்லா
மகிழ்ச்சி இன்று....
முதலில் தம்பியின் திருமண நாள்...
அடுத்து இன்று திருச்செந்தூர் கல்வி மாவட்ட ஆங்கில பட்டதாரி
ஆசிரியர்களுக்கான IEDSS & ICT பயிற்சி துவக்கம். வழக்கம்போல் தான் இன்றைய பயிற்சியும்
என்று நினைத்துவிடாதீர்கள்.
இன்று
காலை சைக்கிளிங் சென்று கொண்டிருக்கும்போது இன்றைய பயிற்சி குறித்து
யோசித்துகொண்டே சென்று கொண்டிருந்தேன். கன நேரத்தில் உதித்த ஐடியாதான் இன்றைய
பயிற்சியில் செயல்படுத்தியது. இம்சை அரசன் வடிவேலு அந்த படத்தில் சொல்வாரே
“ மன்னா எத்தனையோ இடையுறாத பணிகளுக்கு
இடையில் இந்த மகாசிந்தனை உங்களுக்கு எப்படி தோன்றியது?
அப்படி கேளும் அமைச்சரே!
என்று வடிவேலு அவரைப்பற்றி நான் ஒரு மாவீர
சக்கரவர்த்தி என்பது ஒருபுறம் இருக்கட்டும்…. என்று அப்படி இப்படி புகழ்ந்து கூறி…
பின்னர் இவரை சரித்திரத்தில் எப்படி இடம்பெறச் செய்வது என நினைத்துக்கொண்டே கழிவறையில்
அமர்ந்திருக்கும் போது கனநேரத்தில் என் ஞானத்தில் உதித்தது உதயமானது இந்த ஓவியம்”
என்று தன் தலையை உடலில் இணைத்து ஓவியம் வரைவார்.
அப்படி
இன்று சைக்கிளிங் சென்றுகொண்டே பயிற்சி குறித்து யோசிக்கும்போது இன்று
மாற்றுத்திறனாளி குறித்த பயிற்சி ஆகவே ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையை வச்சே
பயிற்சியை ஆரம்பித்து அந்த குழந்தையை கவுரவித்தால் என்ன என்று தோன்றியதன் விளைவு.
இன்று அதை செயல்படுத்தியே காட்டிவிட்டேன். உடனே திருச்செந்தூர் பெண்கள்
மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டு ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையை
அனுப்ப வேண்டும் என்று தகவலைக் கூறி அந்த மாற்றுத்திறனாளி குழந்தையை வரவழைத்து இன்றைய
பயிற்சியை ஆரம்பித்தோம். அவரும் இரண்டு நிமிடங்கள் பேசினார். அவருக்கு எல்லையில்லா
மகிழ்ச்சி. கருத்தாளர் திரு.மைக்கேல் ஆசிரியர் அக்குழந்தைக்கு பொன்னாடை போர்த்தி
கவுரவித்து இன்றைய பயிற்சி மிகச்சிறப்பாக ஆரம்பித்தது.
மாற்றுத்திறனாளிகள்,
பெண்குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் என ஏதோ ஒரு வகையில் அவர்களை
இச்சமூகம் ஒதுக்கியே வைத்திருக்கிறது.
அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும்போது, அவர்களுக்கு ஒரு
இடம் கொடுக்கும்போது, அவர்களைப் பாராட்டும்போது அவர்களும் விழித்தெழுவார்கள். இந்தச்சமூகத்தில்
அவர்களுக்கும் இடமுண்டு என்பதை நாம் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
இன்றை
பயிற்சியில் அதைச் செய்யும்போது மகிழ்ச்சி அளவிட முடியவில்லை.. அதிலும் படுக்கபத்து
ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஒதுக்கித்தள்ளப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி மாணவனைக் கையில்
எடுத்து அவரை பத்தாம் வகுப்பு எழுதுநர் வைத்து தேர்ச்சி பெற வைத்து இன்று பதினொன்றாம்
வகுப்பு படித்து கொண்டிருக்கிறார் என்று கூறிய போது என்னுடல் புல்லரித்தது. “ சார்
அந்த பையன் ஒரு நாள் என்னை சார் நீங்கதான் எனக்கு தெய்வம் சார். எப்படியாவது பதினொன்று,
பன்னிரண்டு தேர்ச்சி பெற்று கல்லூரி படித்து கவர்மெண்ட் வேலைக்கு போகனும் சார்” னு
சொல்லியபோது என் கண் கலங்கிவிட்டது..
மாற்றுத்திறனாளிகள் கடவுளின் தூதர்கள்.. கடவுளின் குழந்தைகள்
அவர்களுக்கு செய்யும் உதவி நேரிடையாக கடவுளைச் சென்றடையும். தலைமை தபால் நிலையத்தில்
சேர்க்கப்படும் தபால் உரியவரை உடனே சென்றடைவது போல…
இந்நாள்
வாழ்வில் மறக்க முடியாத நாள்…..
No comments:
Post a Comment