Saturday, March 28, 2020

தமிழ்நாடு புதிய பாடத்திட்ட அடிப்படையில் எழுதப்பட்ட தமிழ்ப்பாட புத்தகங்கள் குறித்த ஆய்வு..


2018-2019 ஆம் கல்வி ஆண்டில் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட அடிப்படையில் பாடப்புத்தகங்கள் எழுதப்பட்டன. 2019-2020களில் மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் ஏற்கனவே வெளினாய புத்தகங்களில் திருத்தங்களும் வெளியிடப்பட இருக்கின்றன. மாநிலம் முழுவதிலிருந்தும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தொடர்ந்து பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கல்வியாண்டில புத்தகங்கள் எழுதும் பணி மேலாய்வாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வல்லுநர்கள், பாட ஆசிரியர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள், தட்டச்சர்கள், விரைவுக்குறியீட்டு வல்லுநர்கள், காணொளி உருவாக்கம் செய்பவர்கள், உதவியாளர்கள் என பல ஆளுமைகள் கூடி டி.பி.ஐ வளாகம் ஏதோ திருவிழா போல் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.. 90 சதவீதப்பணிகள் நிறைவடைந்து விட்டன.. புத்தகம் எழுவதில் உள்ள சிரமங்கள்.. அதை உருவாக்கும் விதங்கள்.. ஏற்பட்ட அனுபவங்கள் என அனைத்தும் கற்றுக் கொடுத்தன. நிறைய கற்றுக் கொண்டோம்.. சென்னையின் வாழ்வியல் நடைமுறைகளை அறிந்து கொண்டோம். ஒரு கட்டத்தில் சென்னை வாழ் மக்களைப் போலவே மாறிவிட்டோம். மேலாய்வாளர்கள்… வல்லுநர்கள், என அனைவரிடமும் பழகுமு வாய்ப்பும் கிடைத் து.. வாசிப்பதில் கொஞ்சம் ஆர்மவமுள்ள என்னை முழுநேர வாசிப்பாளானாக, தேடுவதில் தீவிரத்தை ஏற்படுத்தியது இந்த புத்தகம் எழுதும் பணி.. அனுபவங்களை எழுத ஆரம்பித்திருக்கிறேன். முழுமையடையும் போது அதுவும் கூட ஒரு புத்தகமாகலாம்.. வாருங்கள் எனக்கு பிடித்த தமிழ்ப்பாடநூல்களை ஆராய்வோம்.. அதற்கு முதலில் பாடப்புத்தகற்களின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
பாடநூல் அடிப்படைக் கட்டமைப்புகள்.
          ஒவ்வொரு தமிழ்ப்பாடநூலும் பொருண்மையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. அதாவது மொழி, இயற்கை, சுற்றுச்சூழல், பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், கல்வி, நாகரிகம், தொழில், வணிகம், கலை, அழகியல், புதுமைகள், அறம், தத்துவம், சிந்தனை, மனிதம், ஆளுமை என்ற பொருண்மைகளை உள்ளடக்கியது. பொருண்மைகள் என்றால் பொருள் பொருந்தி பாடங்கள் அமைக்கப்படும்.. உதாரணமா மழி என்ற பொருண்மையை எடுத்துக் கொண்டால் தமிழ்ப்பாடநூலுக்கே உரிய உரைநடை, செய்யுள், துணைப்பாடம் என்ற வடிவமைப்புகள் அனைத்து மொழியைச் சார்ந்தே அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடம் நிறைவுற்றதும் பாடத்தோடு தொடர்புடைய செயல்பாடுகள் ( கேட்டல் பேசுதல் படித்தல் எழுதுதல் பகுத்தல தொகுத்தல் ஆகிய திறன்கள் ) கற்பவை கற்றபின் என்ற பகுதியாக வைக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் இந்தப்பகுதியை நன்கு கற்றுக்கொண்ல் பாடங்கள் மிக எளிமையாகவும் பயன்படும் வகையிலும் அமையும்.  பாடங்கள் நிறைவுற்றதும் மதிப்பீடு, திறன் அறிவோம், நம்மை அளப்போம் என்ற வடிவங்களில் கற்றல அடைவுகளைச் சோதிப்பதற்கான தளங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அடுத்து மொழியின் பெருமைகளை, சிறப்புகளை மேற்கொண்டு தெரிந்து கொள்வதற்காக, மொழியினைச் சுவைப்பதற்காக மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு, செயல் திட்டம் என்ற பகுதிகள் அமைக்கப்பட்டிருக்கும்.  மதிப்புகளை அறிந்து கொள்வதற்காகவும் வாழ்வில் பயன்படுத்துவதற்காகவும் நிற்க அதற்குத் தக என்ற பகுதியும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அறிந்து கொள்வதற்காக இணைத்தில் காண்க மற்றும் விரைவுக் குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் குறியீடுகளை அலைபேசியில் ஸ்கேன் செய்யும்போது தேவையான காணொளிகள் அங்கு பதிவிடப்பட்டு இருக்கும். அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து பாடம் தொடர்பான கூடுதல் செய்திகளை அங்கு தரப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று இணையத்தில் தேடிக் கண்டடையலாம்.
          மேலும் சில தலைப்புகள் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த தலைப்புகள் மாணவர்களிடம் ஒரு ஆரவத்தைத் தூண்டும். உதாரணமா 12ஆம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் மொழி என்ற பொருண்மை “உயிரினும் ஓம்பப் படும்“ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ணமயமான தலைப்புகள், சொற்களுக்கு வண்ணமிட்டுக் காட்டுதல் போன்றவைகளும் இடம்பெற்றுள்ளன. கண்ணைக் கவரும் ஓவியங்கள் ஒவ்வொன்றும் கதை சொல்லும்.. அட்டைப்படங்கள் வண்ணங்களால் கருத்துகளால் ஜொலிக்கும் கண்ணைக் கவரும்.
தமிழ்ப்பாடம்.
          பொதுவாக அனைத்து பாடங்களும் தகவல்களை மாணவர்களுக்கு சொல்லித்தருவதாக அமையும். தமிழ்ப்பாடம் மட்டும்தான் தகவல்களோடு அவர்களின் மொழி ஆளுமையையும் வளர்க்கும் விதமாக அமைக்கப்படும். அந்த வகைளில் மொழிப்பாடங்கள் பல்வேறுபட்ட தகவல்களையும் மொழியின் சிறப்புக் கூறுகளோடு அமைக்கப்பட்டுள்ளன. மொழி என்பது உணர்வுகளின் வெளிப்பாடாக அமைய வேண்டும். ஏதோ வாசித்தோம் அப்படியே எழுதினோம் என்று இருக்காமல் கெருத்துகளை, தகவல்களை உள்வாங்கிக் கொண்டு மொழியின் சிறப்பை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் தமிழ்ப்பாடம். அந்த வகயிழல் தான் தமிழ்ப்பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேட்டல் பேசுதல் படித்தல் எழுதுதல் என்ற அடிப்படைத் திறன்களோடு பகுத்தல் தொகுத்தல் பயன்படுத்துதல் திறனை வளர்ப்பதாகவும் தமிழ்ப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்தமாக கருத்துகளை எழுதும் திறன் மேம்பட வாய்ப்புகள் நிறைய வழங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு….
          அன்பிற்கினிய ஆசிரியர்களுக்கு, “ ஆற்றல்மிகு ஆசிரியர்களே, மாற்றம் என்ற சொல்லைத் தவிர ஏனையவை எல்லாம் மாறும் என்பது இயங்கியல விதி. வளர்ந்து வரும் உலகச்சூழலுக்கு ஏற்ப ஆற்றல்சார் மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. மனிதர்களின் அனைத்து செயல்களுக்கும் மூலகருவியாக இருப்பது அறிவு. அவ்வறிவின் நுணுக்கங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின பன்முக ஆளுமை வெளிப்பட வேண்டிய இடம் வகுப்பறை.  ஊடகற்களின் வீச்சு, மாணவர்களை ஈர்க்கும் உலகத்தில் வாழும் நமக்கு சுவையான கற்பித்தல் செயல்பாடுகள் ஏராளமாகத் தேவைப்படுகின்றன. காலந்தோறுத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும் தமிழ் மொழியினை அதன் பேரழகை  மாணவர்களின் உள்ளங்களில் ஒளிரச் செய்வோம்” – இது தமிழப்பாடநூல் தயாரிப்பின் போது ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கையேட்டில் உள்ள பத்தி.
பாடப்பகுதிகளுக்குள் உள்ள குறியீடுகள்.
          மாணவர்களின் கவனத்தை ஈப்பதற்காகவும், சுவையூட்டுவதற்காகவும் பல குறியீடுகள் தமிழ்ப்பாட புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாட முகப்பில் முகவுரை போல பாட நோக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிக்கோள் தெளிவாக இருக்கும் பட்சத்தில் கற்பித்தல் சரியான இலக்கினை அடைய முடியும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இப்பகுதி வைக்கப்பட்டுள்ளது. பாடத்தலைப்புகளில் விரிந்த புத்தகமும், புதிய செய்திகளை அறிய “தெரியுமா?  “தெரிந்து தெளிவோம்“,  ஆளுமைகளை அறிமுகம் செய்திட “யார் இவர்“  அறிவியல் சார்ந்த தமிழ் செய்திகளை அறிய “திட்பமும் நுட்பமும்“  ஒவ்வொரு பாடமும் நிறைவடைந்த பின்னர் பாடக்கருத்துகளை வலுவூட்டும் விதமாக “கற்பவை கற்றபின்“ மாணவர்களின் அடைவுகளை அளந்தறிய மதிப்பீடு,  இலக்கியச் சுவைகளை உணர்ந்து மொழியை பயன்படுத்தி “மொழியை ஆள்வோம்“  உயர்சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள “மொழியோடு விளையாடு“  விழுமியங்களை அறிந்திட ஏதுவாக “ நிற்க அதற்குத் தக“ வாசிப்பை நேசிப்பதற்காக பாடக்கருத்துகளோடு தொடர்புடைய புத்தகங்களை மாணவர்கள் எளிமையா அடையாளம் கண்டு படித்திட “ அறிவை விரிவு செய்”, வளர்ந்து வருமு தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுத்தி “இணையத்தில் காண்க“ இப்படி பல பகுதிகள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுமு விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு,
          அன்பார்ந்த மாணவச் செல்வங்களே! புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்ப்பாடபுத்தகங்கள் உங்களின் தாய்மொழியின் பெருமைகளை அறிந்து அதை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தமிழ்ப் பாடபுத்தகங்கள் தமிழின் தொன்மையைப் பறைசாற்றும். அதனூடே பயணித்து அதன் தொன்மைகளை ஆராயுங்கள். இலக்கியங்களைச் சுவையுங்கள். இலக்கணங்களை அள்ளிப் பருகி புதியன படையுங்கள். சிறுகதைகளும், உரையாடல்களும் உங்களை படைப்பாளராக்குவதற்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கற்கும் நீங்களும் கவிதைகள், சிறுகதைகள் எழுதுங்கள். மொழி என்பது பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்பைதைத் தாண்டி மனித உள்ளுணர்வுகளைத தட்டி எழுப்பக் கூடியது. புலவர்களின் சொல் வன்மைகளைக் கண்டு நீங்களும் செய்யுள் இயற்றுங்கள். உவமைகளில் குளித்து புதிய உவமைகள் படையுங்கள். அணிகளோடு விளையாடி இன்பம் காணுங்கள். கதை மாந்தர்களோடு பயணித்து பரவசமடையுங்கள். தொடர் நிலைச் செய்யுள்களில் காட்சிகளை நடித்துக் காட்டி திரைப்பட இலக்கியத்திற்கு நீங்களும் பங்காற்றுங்கள். ஆளமைகளை அறிந்து கொண்டு, அவர்களின் திறன்களை உள்வாங்கிக் கொண்டு உங்களின் தனித்திறன்களை வெளிக்கொணருங்கள். தற்கால எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவர்களின் எழுத்துகளை சுவையுங்கள். முடிந்தால் விமர்சனம் செய்யுங்கள். கதைகளின் முடிவுகளை நீங்களே தீர்மானியுங்கள். முடிவுகளை மாற்றி  எழுதிப்பாருங்கள். சமூகத்திற்கு நீங்கள் ஆற்றும் பணிகளுக்கு இந்தப் பாடப்புத்தகம் பெரிய அளவில் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. சமூக பிரச்சினைகள் குறித்து வகுப்பறையில் விவாதியுங்கள். குடியிருப்புகளுக்கு தேவையான வசதிகளை சட்டத்திற்கு உட்பட்டு கடிதங்கள் மூலமாக பெற்றிடுங்கள். அதற்கு மொழியின் ஆளுமை உங்களுக்கு தேவை.  அத்தகு ஆளுமைகளை இப்பாடப்புத்தகங்கள் வழங்கிடும். இலக்கியங்களைச் சுவைத்து அவற்றை வெளிப்படுத்திப் பாருங்கள். சிறந்த பேச்சாளராவீர்கள். நாவன்மை படைத்தவர்கள் ஆகுங்கள்.
          இறுதியாக நிறைய கேள்வி கேளுங்கள். பாடப்பகுதிகளில் வினாக்கள எழுப்பி விடை தேட முயலுங்கள். நூலகங்களைப் பயன்படுத்துங்கள். நம் தமிழ் இலக்கியங்கள்  புதையலாய் கொட்டிக் கிடக்கின்றன. அக்கடலில் நீந்தி புதியன கண்டெடுங்கள். படைப்பாளராகுங்கள்.

No comments:

Post a Comment