Monday, March 30, 2020

கருத்தாளர் நான்.... ஆச்சரியமில்லை.. உண்மை

சத்தியமங்கலம் வட்டார வளமையம்.... ஈரோடு மாவட்டம்.... கருத்தாளராக.... அன்று வந்ததும் இதே நிலா... ஆனால் என்ன பியூட்டி தெரியுமா? சத்தியமங்கலத்துலதான் நான் கருத்தாளரா பரிணமித்தது... அதைக் கண்டுபிடித்தது பூங்கொடி, மெய்யப்பன், முருகன், பிளாரன்ஸ், நிர்மலா... சிவக்குமார்.... பால்பரிட்டோ.... விஜயக்குமார்.. மீனாட்சிசுந்தரம்... ரகுபதி... சாமுண்டீஸ்வரி.... அண்ணாமலை.... இவங்கதான்.... என்னமோ என்ட்ட இருக்குன்னு தெரிஞ்சு முதல்ல பூங்கொடி மேடம் வாய்ப்பு தந்தாங்க... அடுத்து மெய்யப்பன்.. இ
வர சொல்லவே வேண்டாம்.. அடுத்தவங்க பெரிய ஆளாக்குறது இவருக்கு அல்வா சாப்பிடுறது மாதிரி..
இப்படி ஒவ்வொருத்தரும் பாத்து பாத்து செதுக்கின கல்லுதான் நான்... இன்னும் பலபேர் செதுக்கி கொண்டே இருக்கிறார்கள். இது முழுமையான சிற்பமாக மாறாது... கடைசி வரை செதுக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.. செதுக்குபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.. இன்று திருச்செந்தூர் கல்வி மாவட்ட ஆசிரியர்கள்... வட்டார வளமைய பயிற்றுநர்கள்... ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,... எம் கொம்மடிக்கோட்டை பள்ளி மாணவர்கள் இப்படி அனைவரும் என்னைச் செதுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்..
சிலரிடம் அனுபவம் கிடைக்கிறது...
சிலரிடம் பாடம் கிடைக்கிறது..
சிலரிடம் வேதனை கிடைக்கிறது..
சிலரிடம் துன்பம் கிடைக்கிறது...
சிலரிடம் துரோகம் கிடைக்கிறது...
சிலரிடம் நகைச்சுவை கிடைக்கிறது..
சிலரிடம் நல்லபண்புகள் கிடைக்கிறது.
சிலரிடம் ஆலோசனைகள் கிடைகிகறது...
சிலரிடம் அன்பு கிடைக்கிறது...
சிலரிடம் ஆறுதல் கிடைக்கிறது...
சிலரிடம் பாசம் கிடைக்கிறது...
சிலரிடம் பழி கிடைக்கிறது...
சிலரிடம் கல்வி கிடைக்கிறது....
சிலரிடம் பேர் கிடைக்கிறது....
சிலரிடம் அவமானம் கிடைகிகறது...
சிலரிடம் கெட்டபெயர் கிடைக்கிறது....
அத்தனையையும் தாண்டி இந்தக்கல் சிற்பமாக செதுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது... எனக்காக கிடைத்தவற்றை எல்லாம் நான் எனக்கானதாக்குகிறேன்... அது வேதனை என்றாலும் வேடிக்கை என்றாலும்.....
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... என்னால் பழிக்கோ பழிச்சொல்லுக்கோ.... என் துறைக்கோ... என் மேலதிகாரிகளுக்கோ... என் நண்பர்களுக்கோ.... என் பெற்றோருக்கோ.... உற்றோருக்கோ துளி அளவிலும் துரோகம் நினைத்தது கிடையாது... நினைக்கப்போவதும் கிடையாது....
போறப்ப ஒன்னும் கொண்டு போறதும் கிடையாது...
இந்தா கொரோனா உணர்த்தாத பாடத்தையா நான் சொல்லிவிட போகிறேன்.....

No comments:

Post a Comment