ஒருமுறை இந்தியாவில் பொருளாதார மந்தம் வந்தபோது ஏழைக்குடும்பங்களையும், நடுத்தர குடும்பங்களையும் காப்பாற்றியது.. பாட்டிமார்களின் சுருக்குப்பையும்... அம்மாக்களின் மசாலா பெட்டியில் மறைத்த பணமும்.. அரிசிப் பானைக்குள் மறைத்து வைத்த பணமும் தான்.. அன்று பிரச்சினையைச் சமாளிக்க வைத்தது.
பணநோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது அவற்றையெல்லாம் மாற்றுவதற்கு கடும்பாடுபட்டு தற்போதும் அந்த சுருக்குப்பை, மசாலாபெட்டி, அரிசிப்பானைகள் நிலமையைச் சமாளிக்க உதவுகின்றன.
பெண்கள் எப்போதும் எதிர்காலத்திட்டமிடலில் வல்லவர்கள்.. எப்போதும் அவர்களை நம்பி கொஞ்சம் பணம் இருக்கும்.. எப்படி என்றால் எப்படியோ எதற்கோ கொடுத்த பணத்தில் சிறிது சிறிது சேமித்து வைத்துக்கொள்வார்கள்.. கண்டிப்பாக ரிசர்வ் பேங்க் அளவுக்கு பணம் அவர்களிடம் இல்லாவிட்டாலும் அவசரத் தேவையைச் சமாளிக்க வைத்திருப்பார்கள்.
இல்லையெனில் தங்க பொருட்கள் அவசரத்திற்கு ஈடு வைப்பதற்கு வைத்திருப்பார்கள்.. அந்த வகையில் அவர்கள் குடும்ப பொருளாதார வல்லுநர்கள்... அது மட்டுமா வேலை செய்வதிலும் வல்லவர்கள்.. எத்தனை சீரியல் போட்டாலும் அதற்கு டைம் ஒதுக்கி மீதி வேலைகளை மீதி நேரங்களில் முடிப்பதிலும் வல்லவர்கள்...
தினம் தினம் செய்ய வேண்டிய வேலைகளைப் பிரித்து வைத்து கனகச்சிதமாக முடிப்பார்கள்.. நாம் வேலைக்கு சென்றுவிடுவோம்.. அவர்களுக்கு அன்றைநாள் முழுவதும் ஏதேனும் வேலை வைத்திருப்பார்கள்.... அவர்களால் சும்மா இருக்க முடியாது.... எந்த வேலையும் இல்லை என்றால் பக்கத்து வீட்டு நண்பிகளிடம் பேசிக்கொண்டே கூடை முடைதல்.. துணிதைத்தல் போன்ற சின்ன சின்ன வேலைகளையும் செய்து முடிப்பார்கள்...
இந்த சுனாமி வந்தபோது ஐந்தறிவு விலங்கினங்கள் எல்லாம் ஏதோ விபத்து என்று கடலை விட்டு விலகி தங்கள் உயிரைக் காத்துக் கொண்டன. ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் மாட்டிக்கொண்டு உயிரை விட்டோம்.....
இந்த கொரோனா வந்ததும் அந்த ஐந்தறிவு ஜீவன்கள் எப்போதும்போல் வாழ்கின்றன. இந்த ஆறறிவு படைத்தவர்கள்தாள் குறிப்பாக ஆண்கள் தான்... குய்யோ முய்யோ என்று கத்துகிறார்கள்.
அலுவலகத்தில் போய் வெட்டி முறிப்பது போல இப்போது வீட்டில் இருப்பதை மீம்ஸ்களாக போட்டுத்தள்ளுகிறார்கள்..
பொண்டாட்டி அடிக்கிறாள்.. விடுங்கள் என்று ஒரு குரூப் கம்ப்ளெயின்ட்...
சமையல் செய்து பொண்டாட்டிக்கு ஒத்தாசையாய் ஒரு குரூப்..
நெட் பேக் முடிந்துவிட்டது என்ன செய்ய என்று ஒரு குரூப்..
500ஜி.பி. இலவசம் என்று ஆளாய்ப்பறக்கும் ஒரு குரூப்..
குழந்தைகள் தொல்லை தாங்க முடியல என்று ஒரு குரூப்...
குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் என்று ஒரு குரூப்..
புத்தக்களைப் படித்து அதுபற்றி உரையாட ஒரு குரூப்...
தூய்மைப்பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட ஒரு குரூப்..
எப்பவும் அரசாங்கத்தை குறை சொல்ல ஒரு குரூப்...
ஓய்வு நேரத்தை தூங்கி கழிக்க ஒரு குரூப்..
போலீசுக்கு தொல்லைத் தர ஒரு குரூப்..
இப்படி எல்லா குரூப்பையும் வாட்ச் பண்ணி முகநூலில் பதிவிட என்னைப் போன்ற ஒரு குரூப்...
கொரோனாவால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஆண்களா அல்லது பெண்களா என்று பட்டிமன்றம் தான் இன்னும் நடத்தவில்லை.. அதற்கும் ஒரு குரூப் தயாராகி இருக்கும்...
ஆக இங்கு பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக நினைப்பது ஆண்கள்தான்.. பெண்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.. சமைக்கிறார்கள்.. துவைக்கிறார்கள்... சாப்பிடுகிறார்கள். குழந்தைகளைச் சமாளிக்கிறார்கள்.. இடையிடையே முகநூலில் பதிவிடுகிறார்கள்.. வாட்சப்பில் வலம் வருகிறார்கள்.... சீரியல் பார்க்கிறார்கள். புதுப்படம் போட்டால் பார்க்கிறார்கள்.. முக்கியமாக வேற்று நபர்கள் வீட்டிற்குள் வந்தால் கைகழுவி வர நிர்பந்திக்கிறார்கள்.. அவர்கள் வழக்கம்போலவே இருக்கிறார்கள்..
துள்ளுவதும் குதிப்பதும் இங்கு ஆண்கள் தான்... சும்மாஇருப்பது என்றால் அவ்வளவு எளிதில்லை ஆண்களே... திட்டத்தை வகுத்திடுங்கள்.. இல்லையெனில் மன அழுத்தம் அதிகமாகும்....
புத்தகம் படியுங்கள்... குழந்தைகளைக் கொஞ்சுங்கள்.... கேரம் செஸ் விளையாடுங்கள். குழந்தைகளுக்கு சொல்லித்தாருங்கள்.... பழைய திருமண ஆல்பங்கள் சிடிக்களைப் போட்டுப்பாருங்கள்.. அதைவிட மகிழ்ச்சி வேறு ஏது? பழைய போட்டோக்ளைப் பாருங்கள்.. ஆட்டோகிராப் கதையை மனைவியிடம் பகிருங்கள்.... வாழ்க்கையில்பட்ட கஷ்டங்களை குழந்தைகளிடம் பகிருங்கள்.... சிரியுங்கள்.. உம்முன்னு இருக்காதீர்கள்.. காலை மாலை சிறிய அளவில் உடற்பயிற்சி செய்யுங்கள்... ஆதித்யா சேனல், சிரிப்பொலி சேனல் உள்ளிட்ட காமெடி சேனல் பார்த்து வாழ்வை என்ஜாய் பண்ணுங்கள்..
வேறுவழியில்லை.....
No comments:
Post a Comment