ஒரு ATM ம் வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் உடன்குடியில் இருக்கிறீர்கள்
என்று அர்த்தம்... ( ஆமா எங்க ஊர்தான்)
பிப்ரவரி 1ஆம் தேதி... நாடே பரபரப்பாக உற்றுநோக்கும் உன்னதமான தேதி...
வருமான வரி கட்டுபவர்களுக்கு
நிதி அமைச்சர் அல்வா
கிண்டும்போதிலிருந்து தொலைக்காட்சியை அணைக்காமல்.... கண்விழியை மூடாமல்
எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் கனமான நாள்...
பிப்ரவரி மாதம் என்றாலே ரோஜா
மலர்களுக்கு உற்சாகம் தொத்திக்கொள்ளும்...
பல ரோஜாக்கள் காதலர்களின்
பரிசத்தில் தொட்டால் சிணுங்கியைப்போல வெட்கத்ததால் மேலும் சிவந்து ஏற்கனவே இருந்த அழகை மெருகூட்டும்...
காதலர்கள் கற்பனை வானில்
சிறகடித்தும் நிஜவானில் மறைந்திருந்து பார்த்து நலந்தானா நலந்தானா
விசாரிப்பார்கள்..
அப்படி ஒரு மாதம்.. பல ரோஜாக்கள்
கண்ணீர் சிந்தும் அது இப்போதைக்கு நமக்கு தேவையில்லை.. நாம் வந்தவேலையைப்
பார்ப்போம்..
அப்படி ஒரு அற்புதமான பிப்ரவரி
மாதத்தில் முதல் நாள் இன்று இந்தியாவின் பட்ஜெட் அறிவிப்பைக் கேட்டு நாடே
உற்சாகத்தில் (?) மிதந்து கொண்டிருந்த அந்திமாலை
நேரம்... வீட்டுக்கு வெளியில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றேன்.
ஒண்ணாம் தேதியல்லவா மனைவி இன்று
கடையில் வாங்கிச் சாப்பிடுவோமே என்றாள். சரி என்றேன். அதான் ஒண்ணாந்தேதி
ஆயிற்றே... இந்த ஒண்ணாம் துதி இருக்கிறதே அது அற்புதமான நாள்... என்ன கேட்டாலும்
கிடைக்கும் என்பது சொல்லியா தெரிய வேண்டும்..நானும் சரி என்று சொல்லிவிட்டு
நண்பர்களின் கடைகளில் ரைஸ்... புரோட்டா என்று ஆர்டர் செய்துவிட்டு ATM சென்றேன்..
இங்கு உடன்குடி பற்றி.....
கருப்பட்டி தயாரிப்பில் உலகபுகழ் பெற்ற நகரம்... இந்து முஸ்லீம்.. கிறிஸ்தவ மக்கள்
அனைவரும் ஒற்றுமையாய் வாழும் ஒரு உன்னத நகரம்... வரலாற்று சிறப்புமிக்க ராக்கெட்
ஏவுதளம் மற்றும் அனல்மின் நிலையம் அமைய இருக்கும் தொழில்நுட்ப நகரம் (? ) மூன்று மேல்நிலைப்பள்ளிகள், அருகிலே இரண்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என பள்ளிகள் அதிகம்
காணப்படும் ஒரு ஊர்.... இங்கு தயாரிக்கப்படும் சுத்தமாக னல்கண்டுக்கு உலக அளவில்
நல்ல பெயர் உண்டு... இப்ப சொல்லிக்கொண்டே போகலாம் அந்த உடன்குடி ஊரில் ஸ்டே்ட
பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி... கனரா
வங்கி... முத்தூட் பிரைவேட் வங்கி.. கூட்டுறவு வங்கிகள் இரண்டு... பாண்டியன் கிராம
வங்கி.. இப்படி ஏகப்பட்ட வங்கிகள் உள்ளன... நகைகடைகளும்... ஏராளம்...
முக்கிய மேட்டருக்கு வருவோம்...
கடையில் டின்னர் ஆர்டர் செய்த இடத்திற்கு வாருங்கள்.. ஆர்டர் செய்துவிட்டு ஏடிஎம்.
சென்றால் நீண்ட வரிசை... மூன்று பேர் எடுத்ததும் ஸ்டேட“் வங்கியில் பணம் இல்லை என
வந்துவிட்டது... எப்போதும் ஸ்டேட் வங்கியில் இதுதான ் நிலை... நரி அடுத்து
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் சாதனை புரிவோம் என்று படித்திருக்கிறோமே
அந்த இந்தியன் வங்கியில் இணைவோம் என்று அந்த வங்க ிஏடிஎம்மிற்கு சென்றால் அங்கும்
வேலை செய்யவில்லை... எதிரில் களரா வங்கி அங்கும் அதே பிரச்சினை... சரி டி.எம்.பி
போலாம் என்றால் 30 பேர் நிற்கும் நீண்ட வரிசை....
சாப்பாடு வாங்கிச் செல்லவேண்டுமே.. சரி இந்தியன் ஓவர்சீஸ்க்கு போவோம் என்று
வந்தால் அங்கும் வேலை செய்யவில்லை... ஆக வணிக நகரமான உடன்குடியில் 1ம் துதி ஒரு வங்கியு ஏடிஎம்மும் வேலை செய்யவில்லை.....
சரி டெக்னிக்கல் பிரச்சனை என்றபால்
பரவாயிவல்லை.. ஒரு நேரத்தில் அனைத்தும் பழுதென்றால்... இது திட்டமிட்டு
செயல்படுத்தும் ராஜதந்திரம்..
ராஜிதந்திரமா? அதென்னப்பா?
இலவசமாக ஏடிஎம் பயன்படுத்திய பிறகான
ஒவ்வொரு பணம் எடுத்தலுக்கும் ரூ.23.... ஒரு ஆள் வேறு
வங்கியில் எடுத்தால் ரூ23... ஒரு நாளைக்கு இப்படி 100பேர் வுறு ஏடிஎம்மில் எடுக்கிறார்கள் என்று வையுங்கள்.... 100X23 = 2300 ஒருநாளைக்கு 2300 என்றால் 1மாதம் 69000ரூபாய்... 12மாதங்களுக்கு கணககிட்டால் பல பேருடைய அசையா சொத்துகளின் மதிப்புள்ள
பணத்தை இவர்கள் செய்யும் இந்த தில்லாலங்கடி வேலையால் நாம் இழக்கிறோம்...
சரி இப்ப அதா முக்கியம் புருாட்டா
வாங்கினியா இல்லையா கேட்பது கேட்கிறது.. வாருங்கள் புரோட்டா கடைக்கு போவோம்...
அதற்கு முன் வீட்டிற்கு... உங்கள் ஏடிஎம்மில் வேண்டுமானால் பணம் இல்லாமல்
இருக்கலாம் ஆனால் எங்கள் வீட்டு மசாலா டப்பாவில் இருக்கிறது பணம்... இங்கு
எப்போதும் குறையாது... குறையும்போதெல்லாம் அங்கு வைக்கப்படும்... உங்களை மாதிரி
ஆசையா தேடி வர்றவங்கள அதுவும் ஒண்ணாம் தேதி வர்றவங்கள ஏமாத்த மாட்டோம்.
அதைக்கொண்டு கடையில் கொடுத்து
டின்னர் முடிச்சோம்....
இந்த உடன்குடி ஏடிஎம்மில் இதான்
நிறைய நாள் நடக்கு... இது தந்திரமாக கூட இருக்கலாம்.. தினம் தினம் நம் வங்கி
அட்டையிலிருந்து 23ரூபாய் போச்சென்றால் நாம் எவ்வளவு
ரூபாய் இழந்து கொண்டிருக்கிறோம்... 5பைசா திருடுனா தப்பா... இல்லை 50000 பேரிடம் 5பைசா திருடினால்... இதுததான் உடன்குடியில் நடக்கிறதோ.... சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு
வைத்திருப்பவர்களே உஷார்.....
சரி கிளைமேக்க்கு வருவோம்.... ஆனா
இந்த ரகசியத்தை வெளியில் சொல்ல கூடாது ப்ளீஸ்... எனக்கே இப்பதான் தெரிய
வந்துச்சு..... நல்ல வேலை லைனில் நிக்கல... ஏன் என்னாச்சு... ஏதும் பிராப்ளமா....
ஆமாப்பா ஆமா.... என்னதான் பிரச்சினை....
எனக்கு இன்னும் ஜனவரி சம்பளமும்
போடலையாம்... சரண்டரும் போடலையாம்....
ஏனாம்... பில்லில் ஏதோ தப்பாம்
அதனால மெயின்பில்லில் இருக்கிற ஒருவருக்கும் ஜனவரி சம்பளம் ஏறலையாம்...
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ ரகசியம்........
No comments:
Post a Comment