1.
டிஸ்லெக்ஸியா காரணங்களும் அறிகுறிகளும்
டிஸ்லெக்ஸியா எதனால் ஏற்படுகிறது?
இதற்கான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. பரம்பரை
இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூளையின் வளர்ச்சியும், செயல்பாடும் மாறுபட்டிருப்பது இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், இது ஒருவருடைய அறிவுத் திறனையோ கற்கும் ஆர்வத்தையோ பாதிக்கும் காரணிகளாக இல்லை என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மொழியோடு சம்பந்தப்படாத பிறதுறைகளில் இவர்கள் பெரும்பாலும் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். உலக அளவில் புகழ் பெற்ற
பிரபலங்கள் பலர் டிஸ்லெக்ஸியா உடையவர்கள். அவர்கள் குறிப்பிட்ட துறைகளில்
வல்லுநர்களாகவும் விளங்குகின்றனர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், லியனார்டோ டாவின்சி, ஹென்றி ஃபோர்டு, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பீதோவான், சச்சின் டெண்டுல்கர், முகம்மது அலி முதலானோர் டிஸ்லெக்ஸியா பாதிப்பு உடையவர்களே. கேள்வி, காட்சி, அறிவுத்திறன், உடலியக்கம்,
நினைவாற்றல், ஆளுமை, சமூக
இணக்கம் போன்ற பல கூறுகளில் இக்குறைபாடுகள் காணப்படலாம். ஆளுக்கு ஆள் இதன்
தாக்கமும் அளவும் மாறுபடலாம்.
புரிந்து
படிக்க இயலாமையின் அறிகுறிகள் சில:
1. முன்/பின், வலது/இடது
போன்றவைகளைப் பற்றிய குழப்பம்
2. அகரவரிசை எழுத்துக்களைக் கற்பதில் உணரப்படும் சிரமங்கள்
3. வார்த்தைகளை நினைவுகூர்தல் மற்றும் பொருட்களை அடையாளங்காண்பதில் உள்ள சிரமங்கள்
4. ஒலி இயைபுடைய சொற்களை அடையாளங்காண்பது, அமைப்பது மற்றும் வார்த்தைகளின் அசைகளை எண்ணுவது போன்றவைகளில் உள்ள சிரமங்கள். (கேள்வியொலி விழிப்புணர்வு)
5. வார்த்தைகளின் பல்வேறு ஒலியலகுகளைக் கேட்பதிலும், பகுப்பதிலும் உள்ள சிரமங்கள் (ஒலியனின் விழிப்புணர்வு)
6. வார்த்தைகளின் பல்வேறு ஒலிபேதங்களை அடையாளங்காண்பதில் உள்ள சிரமங்கள் (கேள்விப்புல பாகுபாடு)
7. எழுத்துக்களின் ஒலிகளை கற்பதிலுள்ள சிரமங்கள்
8. சொற்களை அவற்றின் சரியான பொருளோடு இணைத்துப் பார்ப்பதில் உள்ள சிரமங்கள்.
9. நேரத்தைக் கடைபிடிப்பதிலும் காலம் எனும் நியதியோடு இயைவதிலும் ஏற்படும் சிரமங்கள்
10. சொற்களைத் தொகுப்பதிலுள்ள குழப்பம்
11. பேச்சு சரிவர அமையாமல் போய்விடுமோவென்ற பயத்தில் சில குழந்தைகள் பின்வாங்குபவர்களாகவும், வெட்கப்படுபவர்களாகவும், தங்களைச் சுற்றியுள்ள சமுதாயக் கூறுகளை உணர்ந்து கொள்ள முடியாத காரணத்தால் மற்றவர்களோடு இணக்கமில்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.
12. நடைமுறை ஒழுங்குக் குறைபாடுகள்.
புரிந்து படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மாதிரிகளை ஆய்வு
செய்ததன் வாயிலாகவே இக்காரணிகள் அடையாளங்
காணப்பட்டுள்ளன. பள்ளி வயதுக் குழந்தைகளில் 10-
15 சதவீதம் கற்றல் குறைபாடு உடையவர்கள் என்று புள்ளிவிவரங்கள்
கூறுகின்றன. மேலும் பொதுவான காரணங்களைக் கீழே காணலாம்.
வகுப்பறையில் கேட்டல், படித்தல், சொற்களஞ்சியம்,
எழுதுதுல், அறிதல் ஆகியவற்றில் திறன்களை
மாணவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும்.
2. கற்றல்
குறைபாடுடைய மாணவர்களுக்குக்கற்பித்தல்
கற்றல் குறைபாடுடைய மாணவர்கள்
மற்ற மாணவர்களைப் போல் கற்க
இயலாதவர்கள். அவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் கற்பித்தல்
வேண்டும். காட்சி, கேள்வி, தொட்டுணர்தல்,
செய்து கற்றல், விளையாட்டு முறையில் கற்றல்
உள்ளிட்ட பல்வேறு கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டும்.
கற்றல் என்பது திட்டமிட்ட, வெளிப்படையான,
பல்புலனுணர்வு திறன்களை அடிப்படையாகக் கொண்டது. (கேட்டல், உற்றுநோக்கல், தொடுதல், இயங்குதல்
- VAKT)
பல்
புலனுணர்வு திறன் கற்றல்
கற்றல்
மற்றும் நினைவாற்றலை வளர்க்க காட்சி (Visual), ஒலி (Auditory), தசை
இயக்கத் திறன்கள் (kinesthetic), தொடு உணர்வு (Tactile) திறன்கள்
பயன்படுகின்றன. காட்சிப் படுத்துவது வழியாக மொழியைக் காண்கிறோம். ஒலியைக்
கேட்பதன் வழியாக மொழியைக் கேட்கிறோம். தசை இயக்க மற்றும் தொடு உணர்வு வழியாக,
மொழியின் குறியீடுகளை உணர்கிறோம். இவற்றின் வழியாகவே நாம்
வாசிக்கவும் உச்சரிக்கவும் செய்கிறோம். இதைப் பொதுவாக VAKT என்பர்.
மூளைப்
பயிற்சி
வல, இட மூளைப்பகுதிகளின் இயக்கத்தால்
நடைபெறும் உடலின் இயக்கமே மூளைப்பயிற்சி ஆகும். மூளைப் பகுதிகள் சரியாக இயங்கும்
பட்சத்தில், வேகமான வாசிப்பு, படைப்பாற்றல்,
தன் முயற்சி ஆகியவை சிறப்பாக அமையும். “மூளைப் பயிற்சி” என்பது
கல்விக்கான மனித உடலியக்கயவியலாகக் கருதப்படுகிறது. உடலுறுப்புகளின் எளிய
பயிற்சியானது வாசிக்கவும், பேசவும், எழுதவும்,
உச்சரிக்கவும், கண்பார்வை ஒருங்கிணைக்கவும்
உதவுவதாக டாக்டர். பால்டென்னிசன் கருதுகிறார். இதற்காக சில எளிய தசை இயக்கப்பயிற்சிகள் பரிந்துரைக்கப்
படுகின்றன. அதிகமான நீர் அருந்துவது மூளைக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 8
நடை, குறுக்குச் சால், கிளித்தட்டு,
கயிறுதுள்ளல்(Skipping) போன்ற சிறுவர்
விளையாட்டுகள் சிறுவர்களுக்கு மொழித்திறன் அளிக்கக்கூடிய பயிற்சிகளாகக்
கருதப்படுகின்றன.
சிறந்த வகுப்பறைக்கான
திறன்கள்
1. மனச்சோர்வை நீக்கும் செயல்முறைகளை வகுப்பறையில்
உண்டாக்குதல்
2. ஒரு முறை அறிவுறுத்தியதை மீண்டும் மீண்டும் சொல்லுதல்
3. அறிவுறுத்தியதைக் கோர்வையாக மாணவர்கள்
சொல்லும்படி வினாவுதல்
4. திரும்பச் சொல்வதற்குப் போதுமான காலத்தை
மாணவர்களுக்கு வழங்குதல்
5. பாடம் தொடர்பான வார்த்தைகளை முன்கூட்டியே
சொல்லுதல்
6. விடையைத் திரும்பத் திரும்ப சொல்லுதல்
No comments:
Post a Comment