- CV நடைபெறும் இடத்திற்கு அரைமணி நேரம் முன்னாடியே சென்றுவிடுங்கள்.
- நிரப்பவேண்டிய அனைத்தையும் பந்துமுனைப் பேனாவினால் செய்துவிடுங்கள்.
- வெள்ளைத் தாள் ஏ4 பேப்பர் - ஐந்து கொண்டு செல்லுங்கள்.
- CV க்கு தேவையான அனைத்துச் சான்றிதழ்களிலும் பட்டதாரி ஆசிரியர் அல்லது முதுகலை ஆசிரியர் அல்லது சான்றொப்பம் இட தகுதியான ஒருவரிடம் கையொப்பம் உடன் முத்திரை பெற்றுச் செல்லுங்கள்.
- சான்றொப்பம் இட்ட சான்றிதழ்கள் தனியாக ஒரு கோப்பிலும் அசல் சான்றிதழ்கள் ஒரு கோப்பிலும் வைத்திருங்கள்.
- முடிந்த அளவு நீங்கள் 10 ம், 12ம் வகுப்பு மற்றும் ஆசிரியா் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, கல்வியியல் பட்டப்படிப்புக்கு உரிய மதிப்பெண்களை தனியா ஒரு வெள்ளைத்தாளில் எழுதி சதவீதம் கண்டறிந்து வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு எளிமையாக இருக்கும்.
- கையெழுத்து சரிபார்ப்பு கையொப்பம் என்று உள்ள காலத்திலும் கண்டிப்பாக அட்டஸ்ட் வாங்கிருக்கீறீர்களா என்று சரிபார்த்து செல்லவும்.
- CV க்கு செல்லும் போது பந்து முனைப்பேனா , பென்சில் , அழிப்பான், ஒயிட்னா் , சார்ப்னா் போட்டோ ஒட்டும் பேஸ்ட் , ஸ்டேப்ளா் மற்றும் பின் , குண்டூசி ஆகியவற்றை தவறாது கொண்டு செல்லுங்கள்.
- தண்ணீர் பாட்டில் கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள்.
- நீங்கள் வருங்கால ஆசிரிய ஆடசிரியைகள் எனவே ஆசிரியருக்கு உண்டான தகுதியோடு செல்லுங்கள்.
- ஜீன்ஸ் டீசர்ட் தவிர்த்திடுங்கள். பெண்கள் சுடிதார் தவிர்த்திடுங்கள்.
- நீங்க கட் ஆப் எத்தனை நான் இத்தனை என்று வீணாக யாரிடமும் பேச வேண்டாம். வேலை கிடைத்து விடுமா என்று அனைவரிடமும் விசாரிக்க வேண்டாம். நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டீா்கள் எனவே வேலை கண்டிப்பாக கிடைக்கும்.
- பிலிட் மற்றும் ஆசிரியா் பயிற்சி படித்தவர்கள் தாராளமாக பேப்பர் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம் எனவே தேவையில்லாத அச்சத்தைக் கைவிடுங்கள்...
- டென்சன் ஆகாதீர்கள்..... ரிலாக்ஸ்க ஆக இருங்கள்
- சான்றிதழ் சரிபார்ப்பவர்கள் அனைவரும் அனுபவசாலிகள் எனவே அவா்களிடம் எதிர் கேள்விகள் கேட்காமல் முடிந்த வரையில் நிதானமாக பதிலளியுங்கள்.
- பாஸ்போர்ட் போட்டோ கூடுதலாக வைத்திருங்கள்
வாழ்த்துக்கள் அனைவருக்கும் ........
மு.பாலகிருஷ்ணன்
No comments:
Post a Comment