நடப்பாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும் போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதியும் துவங்குகிறது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், 20 நாளில் தேர்வு முடிவு என பல அதிரடி நடவடிக்கை நடப்பு கல்வியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய, "நாமினல்ரோல்&' தயாரிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம், நேரடியாக, பள்ளியில் இருந்து, தேர்வுத் துறைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல், தேர்வு முடிவு வெளியான உடன் மாணவர்களை அலைக்கழிக்காமல் இருக்க வேலைவாய்ப்பு பதிவு, பள்ளியிலேயே செய்யப்படுகிறது.
இதில் வேலைவாய்ப்பு பதிவுக்கு ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. கடைசி நேரத்தில் ரேஷன் கார்டு குறித்த குளறுபடிகளை தவிர்க்க, நடப்பாண்டில், "நாமினல் ரோல்" தயாரிக்கும் போதே ஒவ்வொரு மாணவரின், ரேஷன் கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு முடிவு வெளியான உடன் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்வது மிக எளிதாக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment