Saturday, January 18, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணம் - விலக்கு

16.10.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 429
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதலிருந்து முழு விளக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களித்து அரசு ஆணையிடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
28.06.2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 30
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரின் கருத்துருவை ஏற்று, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகிய உயர்கல்வி பயிலும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் தனிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment