Monday, January 20, 2014

தாமதமாகும் குரூப்-2 தேர்வு விண்ணப்ப அறிவிப்பாணை

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பாணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில், "2014ம் ஆண்டிற்கு தேவைப்படும் குரூப்-2 பணியிடங்கள் 1181. இதற்கான அறிவிப்பாணை 2014, ஜன., 3வது வாரத்தில் வெளியாகும். அதன் பின் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 18.5.2014ல் தேர்வும், ஆக., 3வது வாரத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜன.,20ம் தேதியை கடந்த நிலையில், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பாணை இதுவரை வெளியாகவில்லை. ஜன., முதல் டிச., வரை 22 வகை தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி., நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தாண்டுக்கான முதல் அறிவிப்பே குரூப்-2 தேர்வு தான். ஆனால், முதல் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாவதிலேயே தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Saturday, January 18, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்

உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணம் - விலக்கு

16.10.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 429
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதலிருந்து முழு விளக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களித்து அரசு ஆணையிடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
28.06.2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 30
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரின் கருத்துருவை ஏற்று, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகிய உயர்கல்வி பயிலும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் தனிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணைகள்

அரசாணை
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

Year - 2012

1.
மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்டந்தோறும் 75 மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்தல் - உணவு மற்றும் விடுதி வசதி தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தித் தருதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlL3KlJL8r8n48fk91O8dOycHoGKFaEioMJ_uNHvXxGl-4c5w8yDRq76Jgb0cEk7nAoblzQ5c0o7QXjbtf7r2E7F66SH5EwPgWQ2QK3WLN9SRZmPgjAI_NyDt3et5-hK6C0eliv6hOFQ/s1600/download+pdf-2.jpg
2. மாற்றுத் திறனாளிகள் நலன் - செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் (Behind the Ear Hearing Aids) வழங்குதல்- நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.  

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlL3KlJL8r8n48fk91O8dOycHoGKFaEioMJ_uNHvXxGl-4c5w8yDRq76Jgb0cEk7nAoblzQ5c0o7QXjbtf7r2E7F66SH5EwPgWQ2QK3WLN9SRZmPgjAI_NyDt3et5-hK6C0eliv6hOFQ/s1600/download+pdf-2.jpg

3.மாற்றுத் திறனாளிகள் நலன் -2011-2012 ஆம் நிதியாண்டில் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.2.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlL3KlJL8r8n48fk91O8dOycHoGKFaEioMJ_uNHvXxGl-4c5w8yDRq76Jgb0cEk7nAoblzQ5c0o7QXjbtf7r2E7F66SH5EwPgWQ2QK3WLN9SRZmPgjAI_NyDt3et5-hK6C0eliv6hOFQ/s1600/download+pdf-2.jpg

4. மாற்றுத் திறனாளிகள் நலன்- 2011-2012 ஆம் நிதியாண்டு -பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான 5 ஆரம்பநிலை பயிற்சி மையங்களை தொடர தொடராணை மற்றும் 01-01-2012 முதல் 20 ஆரம்பநிலை பயிற்சி மையங்களை புதியதாக தொடங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை 
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlL3KlJL8r8n48fk91O8dOycHoGKFaEioMJ_uNHvXxGl-4c5w8yDRq76Jgb0cEk7nAoblzQ5c0o7QXjbtf7r2E7F66SH5EwPgWQ2QK3WLN9SRZmPgjAI_NyDt3et5-hK6C0eliv6hOFQ/s1600/download+pdf-2.jpg
5. மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்வது தொடர்பாக கொள்கை நெறிமுறை உருவாக்க குழு அமைத்தல்- ஆணை வெளியிடப்படுகிறது
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlL3KlJL8r8n48fk91O8dOycHoGKFaEioMJ_uNHvXxGl-4c5w8yDRq76Jgb0cEk7nAoblzQ5c0o7QXjbtf7r2E7F66SH5EwPgWQ2QK3WLN9SRZmPgjAI_NyDt3et5-hK6C0eliv6hOFQ/s1600/download+pdf-2.jpg
6. மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதி உதவித் தொகை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பெயரில் தன் வைப்புக் கணக்கு துவங்க அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlL3KlJL8r8n48fk91O8dOycHoGKFaEioMJ_uNHvXxGl-4c5w8yDRq76Jgb0cEk7nAoblzQ5c0o7QXjbtf7r2E7F66SH5EwPgWQ2QK3WLN9SRZmPgjAI_NyDt3et5-hK6C0eliv6hOFQ/s1600/download+pdf-2.jpg

7. மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களை 2011-2012 ஆம் நிதியாண்டில் தொடர்ந்து செயல்படுத்திட - ரூ.1.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlL3KlJL8r8n48fk91O8dOycHoGKFaEioMJ_uNHvXxGl-4c5w8yDRq76Jgb0cEk7nAoblzQ5c0o7QXjbtf7r2E7F66SH5EwPgWQ2QK3WLN9SRZmPgjAI_NyDt3et5-hK6C0eliv6hOFQ/s1600/download+pdf-2.jpg

8. மாற்றுத் திறனாளிகள் நலன்- தங்களைத் தாங்களே பாரமரித்துக் கொள்ள இயலாத 60ரூ மற்றும் அதற்கு மேல் மனவளர்ச்சி குன்றியோரின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் வருமான வரம்பை கருத்தில் கொள்ளாமல் கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை 2011-12 ஆண்டிற்கு கூடுதல் நிதி
9. மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க தலைமைச் செயலரின் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.

Year - 2011
 
1.
மாற்றுத் திறனாளிகள் நலன்- அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களை களைய அரசுச் செயலாளர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அவர்களின் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.
2. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய ஆண்களுக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்களும் , 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கென தனியாக தொழிற் பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்களும் டிசம்பர் 2011 முதல் புதியதாக தொடங்குதல்- ரூ.76,72,000/-நிதி
3.மாற்றுத் திறனாளிகள் நலன் - 2011-2012 ஆம் நிதியாண்டு - 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான ஏழு இல்லங்களுக்கு திட்டத் தொடரணையும் ரூ.62,49,600/- நிதி ஒப்பளிப்பு செய்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.
Description:  G.O Ms. No. 69 Dt: December 09, 2011

4.
மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெட்டிக்கடை வைக்க நபர் ஒன்றுக்கு ரூ.5,000/- அரசு மான்யமாக வழங்குதல் - 2011-2012-ம் ஆண்டுக்கான திட்டத் தொடராணை- ரூ.3.95 இலட்சம் செலவினம் ஒப்பளிப்பு-ஆணை