Friday, January 26, 2018

அறிவியல் கண்காட்சி

கொம்மடிக்கோட்டை வட்டார வளமையம் சார்பில் இப்பள்ளியில் அறிவியல் கண்காட்ச ிநடைபெற்றது. சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் தண்ணீர் சேமிக்கும் வழிகள், கிரெடிட் கார்டு சொருகினால் தண்ணீர் என்று புதிய கண்டுபிடிப்புகள் சிறப்பிடம் பெற்றன.

சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது . மாணவா்களின் ஆடல் நிகழ்ச்சிகளும் , பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றன.. சிறப்பிடம“் பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

எனது அனுபவம்

இப்பள்ளியில் பயிற்சி மேற்கொண்டதால் எனக்கு கற்பித்தல் குறித்த புதிய உத்திகள் கிடைத்தன. அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக பணிபுரிந்து மாணவர்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்கின்றனர். ஒற்றுமையாகவும் இருந்து மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையோடு செயல்படுகின்றனர்.

JOY OF GIVING WEEK

கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடுத்து மகிழ்தல் வார விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு அறம் சார்ந்த நிகழ்வுகளை ஓவிய ஆசிரியர் திரு. முத்து அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

ஆங்கில இலக்கிமன்ற விழா

எஸ்.எஸ்.என் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி. செல்வி அவர்கள் ஆங்கில இலக்கியமன்ற விழாவினைச் சிறப்பாக நடத்தினார். மாணவர்கள் ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் வாசித்தனர்.

தமிழ் இலக்கியமன்ற விழா

அக் - 12
    தமிழ் இலக்கியமன்றம் வீரமாமுனிவர் இலக்கியமன்ற விழாவாக இப்பள்ளியில் கொண்டாட்ப்பட்டு வருகிறது. இன்று நடந்த விழாவில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் நாடகம் நடித்தனர். குண்டலகேசி காப்பியம் குறித்து தமிழாசிரியர் உரையாற்றினார்.

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் சிறப்பாக பள்ளியில் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் அனைத்து குழந்தைகளையும் வாழ்த்திப் பேசினார். 9ம் வகுப்பு மாணவிகள் ஜவஹர்லால் நேரு குறித்து பேசினர்.