Wednesday, June 23, 2021

அரசு மேந்லைப்பள்ளியில் மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது.

 சு.சந்தோச நாடார் அரசு மேல்நலைப்பள்ளி, கொம்மடிக்கோட்டை... மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது......

வாருங்கள் வருங்காலத்தை அறிமுகம் செய்கிறோம் ...உங்கள் எதிர்காலத்தை திட்டமிட ஆலோசனை தருகிறோம்.... NMMS, NTS, TRUST கல்வி உதவித்தொகை தேர்வுக்ளுக்கு வழிகாட்டுகிறோம்... நம் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலபேர் வருடம் தோறும் 48000 கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
காற்றோட்டமான பரந்து விரிந்த மைதானம்,
மின் விசிறி வசதியுடன் உள்ள வகுப்பறைகள்..
வகுப்பறைகளுக்கு வெளியே இயற்கை குளிரூட்டியான வேம்பு மரங்கள்..
புதிய கட்டிடம்..
HICH TECH LAB.....
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வகங்கள்...
புதிய நவீன் கழிவறைகள்....
அருமையான நூலக வசதி...
உடற்பயிற்சி கருவிகள்...
சத்துணவு.....
பாடப்புத்தகம், மிதிவண்டி, மடிக்கணினி... கணிதப் பெட்டி, வரைபட புத்தகம். இப்படி படிப்பதற்கு தேவையான அனைத்தும் உங்கள் கைகளில்....
எல்லாவற்றுக்கும் மேலாக தரமான ஆசிரியர்கள்...
உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள்...
அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டுகிறோம்.....
உங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சேர்த்துவிடுங்கள்.... எங்கள் நம் பள்ளிக்கும் வாருங்கள்.. தரத்தை அறியுங்கள்.. அப்புறம் உங்களுக்கு எங்கு சேர்க்க தோணுகிறதோ அங்கு சேருங்கள்.... ஒரு முறை சேர்த்து பாருங்கள்....
பொருளாதார பாரத்திலிருந்து உடனடியாக விடுபடுவீர்கள்...
உங்கள் குழந்தைகளின் நிச்சயமான வளமான எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்...
அரசுப்பள்ளியா ஐயையோ என்பார்கள்... பக்கத்து வீட்டு பையன் போகிறான் எதிர்த்த வீட்டு பையன் போகிறான் என்று நானுமு் செய்கிறேன் என்று செய்யாதீர்கள்.... ஒரே ஒரு முறை நம் பள்ளிக்கு வாருங்கள்.... சாதனைப் பட்டியல்களைப் பாருங்கள்.... முடிவெடுங்கள்...
கடைசியாக.... நம் பள்ளியில் சேர்த்தால் உங்கள் குழந்தைகளை எந்நேரமானாலும் சந்திக்கலாம்.... ஆசிரியர்களை எந்நேரத்திலும் சந்தித்து விவாதிக்கலாம்....
கொரொனா பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் முழுபாதுகாப்பு என்பதையும் உறுதி கூறுகிறோம்....

Comment
Share

Tuesday, June 22, 2021

12க்கு பிறகு என்ன படிக்கலாம் ....

 சார்ட்டட் அக்கவுண்ட் படித்து கைநிறைய சம்பாதிக்கலாம்.....

பட்டயக்கணக்காளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சி.ஏ., பயிற்சியை முழுமையாக முடித்தாலே, அனைத்து நிறுவனங்களிலும், நிச்சயம் பணிவாய்ப்பை பெறலாம் என, இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தென்னிந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் தலைவர் ஜலபதி கூறியதாவது:சி.ஏ., படிப்பு பிளஸ்2 முடித்து நேரடியாகவும், இளநிலை முடித்த பின்பும் சேர முடியும். பிளஸ்2 முடித்து நேரடியாக வரும் மாணவர்களுக்கு 'பவுண்டேஷன்' எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் எழுதவேண்டும்.இத்தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் மே, நவ., என இரண்டு முறை நடத்தப்படும். இளநிலை முடித்து வருபவர்களுக்கு இத்தேர்வு இல்லை; மற்ற விதிமுறைகள் பொதுவானது. பட்டம் முடித்து வருபவர்கள், வணிகவியல் பிரிவாக இருப்பின், 55 சதவீத மதிப்பெண்களும், வணிகவியல் அல்லாத பிற பாடங்களை சேர்ந்தவர்கள், 60 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்கவேண்டும். பத்தாம் வகுப்பு முடித்ததுமே பதிவு செய்து கொண்டு, நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளலாம்.கல்விமுறைமுதலில், பவுண்டேஷன் கோர்ஸ்' எனப்படும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். அடுத்து 'இன்டர்மீடியேட்' தேர்வு. இதன் பின் ஆடிட்டரிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று, இறுதி தேர்வு எழுத வேண்டும். பயிற்சி பெறும்போது மாதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. சி.ஏ., படிப்புக்கு ஆகும் செலவினம் மிகவும் குறைவு. வீட்டில் இருந்தபடியே பயிற்சி மேற்கொள்ள முடியும். பயிற்சி மையங்களுக்கும் சென்றும் படிக்கலாம்.நவ., மாத பவுண்டேசன் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், இந்திய பட்டயக்கணக்காளர் அமைப்பு சார்பில், 'ஆன்லைன்' மூலம், ஜூலை 15ம் தேதி துவங்கவுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பவுண்டேஷன் பயிற்சி வகுப்பு முழுமையாகவும், கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு, மூன்று நிலையும் சேர்ந்து பயிற்சி முழுமையாகவும் இலவசமாக வழங்கப்படுகிறது.


வேலைவாய்ப்பு'ஆடிட்டர்' என்று கூறப்படும் பட்டயக்கணக்காளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறை, தனியார் பிரிவில் சிறிய முதல் பெரிய நிறுவனங்கள், கல்விநிறுவனங்கள், மருத்துவமனை என அனைத்து துறைகளிலும் நிதி மேலாண்மை துறையில் அதிகாரிகளாக பணியில் சேரலாம். தனியாகவும் சொந்த அலுவலகம் அமைத்து பயிற்சியை துவக்கலாம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகளவில் உள்ளது.வயது வரம்பு என்பது இல்லை. தேர்வில் வெற்றி பெறமுடியாமல் போனாலும், சி.ஏ., பயிற்சியை முழுமையாக முடித்தாலே, அனைத்து நிறுவனங்களிலும், 'அக்கவுன்டன்ட்' பிரிவில் நிச்சயம் பணிவாய்ப்பை பெறலாம். வெற்றி பெறும் வரை, முயற்சி மேற்கொள்ளலாம்.


இத்துறை சார்ந்த சந்தேகங்களுக்கு 96771-26011/8220522669 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.