நல்லா இருக்கேன்னு பார்த்தா…
அது….பாரதி கண்ணம்மா நெடுந்தொடர்…
வாங்க அந்த நெடுந்தொடரின் ஒரே எபிசோடு..
அதான் வீட்டில் அவ்வப்போது அனைவரும் பார்க்கும் பாரதி கண்ணம்மா நெடுந்தொடரில் நான்
நேற்று பார்த்ததை சொல்கிறேன். நேற்று பார்த்தது நாடகம் அல்ல.. இணைய வழி வகுப்பு அதனால்
எனக்கும் ஆர்வம் தொற்றியது.. அதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.
வீட்டில் இந்த தொடர் போட்டதும் எல்லாரும்
பார்ப்பார்கள். அதிலும் கண்ணம்மாவிற்கு இரட்டைக் குழந்தைகளாமே அக்குழந்தகள் வந்தால்
ஆர்வமாக பார்ப்பார்கள். நான் கண்ணம்மா பேக் தூக்கிட்டு நடந்து செல்றப்ப பார்த்தன்..
அன்னைக்கு ஓ பரவாயில்லையே இந்த தொடர்.. கணவன் கைவிட்டதும் தனியாக தன்னால் வாழ முடியும்
னு நினச்சி ஒருத்தி வீட்ட விட்டு வெளியேறி போறாளே.. அப்ப இந்த தொடர்ல ஏதோ இருக்குன்னு
நினச்சேன்.. அதனால எப்போதாவது பார்ப்பேன்.. குட்டீஸ்களோட….
அந்தக் கண்ணம்மா இருக்கே கண்ணம்மா.. எப்ப
என்னா நடிப்பு நடிக்கு… ஓவர் நடிப்புடா… வாய்ப்பிருக்கு திரையுலகில்.. அதுவும் இல்லாம
அந்தக் கன்னகுழியில் கண்டிப்பாக ரசிகர்கள் விழுந்துவிடுவார்கள். அடுத்து பாரதி .. டாக்டர்..
குடிகார டாக்டர்… அய்யோ அந்த கண்ணம்மாவின் மாமியார் இருக்கே.. அய்யோடா… உலகமகா நடிப்புடா
சாமி… மருமகளை இப்படி மெச்சிர மாமியார் எங்கும் இல்லை.. இருக்கப்போவதும் இல்லை… என்னா
அக்கறை அட அட அட… மருமகள் வேலை செய்ற இடத்துல கண்காணிப்பு கேமிரா மாட்டி அத வீட்டில்
இருந்து ரசக்கிற மாமியார்… இது ஒண்ணு போதாதா..
மாமியார்களே கொஞ்சம் கண்ணம்மா மாமியார பாருங்க..
ஆனா பாருங்க இந்த கண்ணம்மா அந்த மாமியார பிரிஞ்சி வாழுது.. ஒருவேளை இப்படி இருக்குமோ
மாமியார் நல்லா இருந்தா மருமகள் சரி இல்லை.. மருமகள் நல்லா இருந்தா மாமியாருக்கு சாமி வந்துடுது.. சரி
விடுங்க.. குடும்பத்துல இதுலாம் சகஜம் தான…
மாமியார் ஏன் தெரியுமா சண்டை போடுறாங்க..
வீட்டில் என்னைச் சமாளித்து விட்டால் நீ வெளி உலகில் யாரை வேண்டுமானாலும் சாளித்து
விடலாம்.. அதற்கான பயிற்சிதான் மாமியார் மருமகளிடம் சண்டை போடுவது.. அதனால் சண்டைகள் நடக்கட்டும்..
அய்யோ நாம பாதை மாறிட்டோமே…. நாம சொல்ல வந்த
கதை என்ன தெரியுமா? குட் டச்.. பேட் டச்… டோண்ட் டச்….
பெண்களை இன்பத்தைக் கொடுக்கும் போதைப் பொருளாக
நினைக்கும் உலகில் அவர்களிடமிருந்து தன்னைக்
காத்துக்கொள்ள ஒரு பெண் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
முதலில் வீட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து
தன்னைக் காப்பதே பெரிய வேலை அவளுக்கு.. பூனை இருக்குல்லிலையா பூனை.. அது என்ன செய்யும்
தெரியமா? குட்டி போட்டவுடன் அந்தக் குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்தில்
வைக்கும்.. அங்கும் பாதுகாப்பில்லை என்று தெரிந்தால் அடுத்த இடத்திற்கு கொண்டு போகும்.
இப்படி பாதுகாப்பிற்கா அடிக்கடி இடத்தை மாற்றும். பெண்களும் பாதுகாப்பிற்காக என்னவெல்லாம்
தாங்க வேண்டியிருக்கிறது.
வீட்டில் உறவினர்கள் தொல்லை என்றால் வீட்டை
விட்டு வெளியில் வந்ததும் எதிர்த்த வீடு, பக்கத்துவீடு, ஆபீஸ், பேருந்து நிறுத்தம்
என சந்திக்கும் அத்தனை பகுதிகளிலும் ஆண்களால் துன்புறுத்தப்படுகிறாள். பெண்களுக்கு
எதிரிகள் பெண்களே இருக்கும் அதிசயமும் அப்பப்ப நடக்கும். இந்த நிர்மலா தேவிக்கள் மாதிரியான
ஆட்கள்.
சரி தொடரருக்கு ஏற்றார்போல் தொடர்கதையால்ல
போய்ட்டு இருக்குன்னு நினச்சிடாதீங்க…. வந்துட்டேன் விசயத்திற்கு.. நேத்து கண்ணம்மா
அவளேட குழந்தைகளுக்கு .. குட் டச்.. பேட்.டச் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.. இத
குழந்தைகள் பார்ப்பாங்கள்ள.. நல்ல விசயம்.. அத ஒரு பொம்மய வச்சி தொட்டுக் காமிச்சி
இங்க தொட்டா குட் டச… இங்க தொட்டா பேட் டச் னு அழகா சொல்லிட்டே இருப்பாங்க… அப்ப பாரதி
வந்து அவரு பங்குக்கு… இப்பலாம் சில நேரங்கள்ளல டோண்ட் டச்தான் சொல்லிக் கொடுக்கனும்னு
சொல்லிக்காடுப்பாரு…
நல்ல
சீன்… குழந்தைகளுக்கு இதைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்கனும்..
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு
சொல்வாங்க.. அதே மாதிரி சில ஆண்களின் கண்களுக்கு பார்க்கும் பெண்களையெல்லாம் அடையத்
துடிக்கும் ஆசை வரும்… ஆசை வந்துட்டாலே அடுத்து என்ன செய்வான் திட்டம் போடுவான்.. எப்படி
ஏமாத்தலாம்.. பெண்கள் எதுக்கு அடிமை.. எங்கெல்லாம் போறா… அவளின் ஆசை என்ன.. அவளுக்கு
என்ன பிடிக்கும்.. என்ன பிடிக்காது னு பெரிய பிஎச்டி யே பண்வான்… அத விட அவளுக்கு எது
தெரியாதோ அதை முதலில் இவன் தெரிந்து கொள்வான்.. இந்த ஆராய்ச்சிய அவன் பாடத்துல பி.எச்.டி
பண்ணியிருந்தா பதவி உயர்வாவது வேலை வாய்ப்பாவது கிடச்சிருக்கும்.
அப்படி ஆராய்ச்சி பண்ணி அவளை அடைய திட்டமிடும்போது
சில பெண்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்… சில பெண்கள் அகபட்டுக் கொல்கிறார்கள்.. சில
பெண்கள் எதிர்க்கிறார்கள்..
இந்த எதிர்க்கும் பெண்களை அவன் வக்கிர புத்தியோடு
அணுகுகிறான். அதான அசீட் வீச்சு… கற்பழிப்பு… இப்படியெல்லாம் நடக்கு…
அதவிட வேலைக்குப் போகும் பெண்கள் படும் அவஸ்தை
இருக்கே அய்யய்யோ…. அதுவும் மேலதிகாரிகள் ஆண்களாக இருந்து விட்டால் அவ்வளவுதான் அவரு
சொல்ல தட்டவும் முடியாம செய்யவும் முடியாம எப்படியாவது அவர தவிர்த்துவிட்டு வீட்டுக்கு
வருவதற்குள் போதும் போதும்னு ஆயிடுது… இதுல பெண் அதிகாரிகள்னா அதுக்கும் மேல..
ஆக என்ன சொல்ல வற்றேன்னா.. இவ்வளவும் நடக்குமா
அய்யய்யோ னு வீட்டிலே முடங்கியிராதீங்க…. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு னு
நினச்சிடாதீங்க.. அது ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒண்ணுமில்லாதகாலத்துல…தைரியமாக வெளில
வாங்க… அறிவியல் உலகம் உங்களுக்கு கை கொடுக்கும்.. குழந்தைகள்ளே சொல்லி சொல்லி வளருங்க
குழந்தைகள…
எங்க சிரிக்கனுமோ அங்க சிரிக்கனும்.. எங்க
முறைக்கனுமோ அங்க முறைக்கனும்.. எங்க அழனுமோ அங்க அழனும்.. எங்க அடிக்கனுமோ அங்க அடிக்கணும்…
இதெல்லாம் சொல்லித்தாங்க.. ஏமாத்துறவன எகிறி எகிறி அடிங்க… ஒருத்தங்க அடிக்கிற அடி
தப்பு செய்யற ஒவ்வொருத்தன் மேலயும் விழனும்.
அலுவலகத்தில் தொல்லையா முதலில் கண்காணிப்பு
கேமிராக்களைப் பொருத்தச் சொல்லுங்க… அதிகாரிகள் தொல்லையா அப்படியே ஷ்கிரீன் சாட் போடுங்க…
நம்ம ஆளு மானத்துக்கு மட்டும்தான் பயப்படுவான்.. அடுத்து ஆளே இல்லாத கண்காணிப்பு கேமிராக்களுக்கு
பயப்படுவான்… நாம கத்திய தூக்குன அவன் அருவாவ தூக்குவான்.. நாம அறிவயல தூக்குனா அடங்கிப்போவான்…
இத படிச்சிட்டு எல்லா ஆண்களையும் கெட்டவங்கனு
சொல்றாப்ல வாத்தியார்னு தப்பா நினச்சிராதீங்க… ஆண்கள்… பலபேர் அன்பாகவும் பாசமாகவும்
இருப்பாங்க… ஏங்க போலியான கண்கள் எதுன்னு உங்களுக்கு கண்டு பிடிக்க முடியாது.. அழகா
கண்டுபிடிக்கலாம்..
நிறைய ஆய்ட்டு.. இத சொல்லி முடிக்கிறேன்..
ஜொல்லு விட்ட மேலதிகாரிக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க, முந்தின நாள் இரவு தன்னுடைய
வீட்டுக்கு வரச்சொல்கிறாள் அந்த சராசரி பெண்.. வீட்டில் யாரும் இல்லாத அந்த நாளில்
வர சொல்கிறாள்.. ஜொல்லு ரெடியாகுது.. அதுவும் வீட்டில் யாருமே இல்லை.. கேக்கவா வேணும்..
நகத்துக்குள்ள வரைக்கும் சென்ட் அடிச்சிட்டு போறார் இரவு எட்டு மணிக்கு…
ஆளில்லாத அந்த வீட்டில் அன்றைய இரவு உணவைத்
தயாரிக்கச் சொல்வதாகக் கூறிவிட்டு இவரை ஒரு அறையில் தொலைக்காட்சி பார்க்கவைத்துவிட்டு
செல்கிறார்.
இவர் மன்மதக் கனவுகளோடு தொலைக்காட்சிகளில்
கிளுகிளு காட்சிகளைத் தேட அந்த சராசரிப் பெண் சமையல் செய்ய.. நேரம் பத்தை நெருங்குகிறது…
இவர் சலலாபத்தோடு சமையலறைக்கே வந்து விடுகிறார். அந்தப்பெண்ணோ பொறுங்கள் இன்னும் இரண்டு
மணி நேரம் இருக்கிறது உங்களின் பிறந்த நாளுக்கு என்று சொல்லி ஒரு அறையில் வைத்து அடைத்துவிட்டு
சமையலைக் கவனிக்கிறாள்.. நான் அழைக்கும் போது வந்தால் போதும் என்று சொல்லி செல்கிறாள்.
இவருக்கு ஆசையும் மோகமும்அதிகரிக்க தன்னையே
மறக்கிறார். தயாராகிறார் மன்மத யுத்தத்திற்கு.. மணி பன்னிரண்டை நெருங்குகிறது.. வீட்டில்
கொலுசு சத்தம் அங்கும் இங்குமாக கேட்டு கடைசியில் இவர் இருந்த அறைப் பக்கம் கேட்கிறது…
இவர் ஆயத்தமாகிறார்… வந்தவர் திறந்து ஆசையில் கட்டிஅணைக் முற்பட .. அடுத்த அறைக்குள்
காத்திருப்பதாகச் சொல்லிச் செல்கிறாள் அடுத்த அறைக்குள்.
இவருக்கோ மோகம் முட்டிக்கொண்டு வருகிறது..
அதற்கான தடை இப்போது ஆடைகள் மட்டுமே களைந்தெறிந்து
அடுத்த அறைக்குள் மின்னல்வேகத்தில் பாய்கிறார் உடை ஒன்றும் இல்லை….
இவர் பாய்ந்ததும் மின்விளக்குகள் ஒளிர்கின்றன..
நடு அறையில் பிரமாண்டமான கேக்குடன் இவருடன் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் ஆண்களும்
பெண்களுமாக சுற்றி நிற்கிறார்கள். ஹேப்பி பர்த்டே டூ யூ சத்தம் காதைக் குடைய…. இவரோ
அம்மணமாக பிறந்தநாள் அன்று பிறந்த மேனியோடு நிற்கிறார்… இதற்கு மேல் என்ன நடந்திருக்கும்
உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
தொடர்கள் சில நல்லவற்றையும் சொல்லித் தருகின்றன…
அதை மட்டும் எடுத்துக் கொள்வோம்… நன்றி….