வகுப்பு 9 கவிதைப்பேழை
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று
பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர்,
நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். இது
போன்றே வில்வம், பெருங் குமிழ், தழுதாழை,
பாதிரி, வாகை, இவற்றின்
வேர்களைப் பெரும் பஞ்சமூலம் என்பர். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம்
பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து
பொருள்களும் உயிர் நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.
ஆசிரியாகுறிப்பு
இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். காரி என்பதுவே இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழில் பற்றி வந்த பெயராகலாம். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இவர் சைன சமயத்தார் என்பது இந் நூலின் காப்புச் செய்யுளால் அறியலாகும். பாயிரச் செய்யுளிலிருந்து இவர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது தெரிய வருகிறது. இந்த ஆசிரியரிடம் கல்வி பயின்றோருள் மற்றொருவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களின் ஆசிரியராகிய கணிமேதாவியார். இவரும் மாக்காயனாரின் ஊராகிய மதுரையைச் சார்ந்தவராதல் கூடும். இவர் பஞ்ச தந்திரக் கதையுள் வரும், மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத் தீர்த்த கங்கைக் கரையில் உள்ள பூனைக் கதையை, 'உறுதவ மேல் கங்கை கரைப் பூசை போறல் கடை' (100) என்று சுட்டியுள்ளார். இதனால் பஞ்ச தந்திரம் தமிழில் பெருக வழங்கிய காலத்தை ஒட்டி இந்நூலாசிரியர் வாழ்ந்தனர் என்று எண்ணவும் இடமுண்டு.
இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். காரி என்பதுவே இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழில் பற்றி வந்த பெயராகலாம். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இவர் சைன சமயத்தார் என்பது இந் நூலின் காப்புச் செய்யுளால் அறியலாகும். பாயிரச் செய்யுளிலிருந்து இவர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது தெரிய வருகிறது. இந்த ஆசிரியரிடம் கல்வி பயின்றோருள் மற்றொருவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களின் ஆசிரியராகிய கணிமேதாவியார். இவரும் மாக்காயனாரின் ஊராகிய மதுரையைச் சார்ந்தவராதல் கூடும். இவர் பஞ்ச தந்திரக் கதையுள் வரும், மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத் தீர்த்த கங்கைக் கரையில் உள்ள பூனைக் கதையை, 'உறுதவ மேல் கங்கை கரைப் பூசை போறல் கடை' (100) என்று சுட்டியுள்ளார். இதனால் பஞ்ச தந்திரம் தமிழில் பெருக வழங்கிய காலத்தை ஒட்டி இந்நூலாசிரியர் வாழ்ந்தனர் என்று எண்ணவும் இடமுண்டு.
இந் நூலில் நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்துப்பாடும் திறம் நோக்கத்தக்கது. இந்நூற் செய்யுட்களில் அமைந்துள்ள ஐந்தைந்து பொருள்களும் திரிகடுகத்தில் உள்ளது போலத் தெளிவுபட விளக்கமாக அமையவில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைக் குறிப்பு பதினைந்து இடங்களிலேதான் உள்ளது (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83, 92, 92) இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன. 85-முதல் 89 வரை உள்ள ஐந்து பாடல்கள் பல பிரதிகளில் காணப்பெறவில்லை. ஆனால் புறத்திரட்டில் இந்நூலைச் சார்ந்த மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. அவை விடுபட்ட இந்தப் பாடல்களாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆதாரமின்மையால் அவை மிகைப் பாடல்களாக தனியே தரப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு உவமை அணி விளக்குவதற்காக
உவமையணி
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி
விளக்குவது.
ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது.
தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது
உவமையணி மூன்று வகைப்படும்.
அவையாவன: பண்பு உவமையணி, தொழில் உவமையணி, பயன் உவமையணி
பண்பு உவமையணி
உதாரணம்: குத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
தொழில் உவமையணி
உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம், தாவும் மனம்.
பயன் உவமையணி
உதாரணம்:
மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக
வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
உவமானம்
ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
உவமேயம்
ஒப்பிட
எம்மிடமுள்ள பொருள்
உவமை உருபுகள்
உதாரணம்:
போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
பொதுத்தன்மை
இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன்
உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இங்கு,
உவமானம் : அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம் : தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு : போல
உவமைத்தொகை
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது
உவமை தொக்கி நிற்பது.
உதாரணம்: கயல்விழி - கயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.
மதிமுகம்
- மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும்
இரண்டாகப் பிரிக்கலாம்.
1- எடுத்துக்காட்டு உவமையணி
2- இல்பொருள் உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
இது
நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
தொட்டனைத்து
ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு. (அதிகாரம்:கல்வி குறள் எண்:396)
கற்றனைத்து ஊறும் அறிவு. (அதிகாரம்:கல்வி குறள் எண்:396)
மணற்கேணியானது
எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர்
எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
இல்பொருள் உவமையணி
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை
இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
அன்பகத்து இல்லா
உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று
அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம்
தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.
சிறுபஞ்சமூலம் பாடலைப் போல
உள்ள நல்வழிப்பாடல்
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்
குரைத்தாலுந் தோன்றா துணர்வு. (35)
பூ பூக்காமலேயே காய் காய்க்கும் மரங்களும் உள்ளன. அதுபோல
பெற்றெடுத்த பிள்ளைகளுக்குள்ளேயும் தாய் தந்தையர் ஏவாமல் அவர்களின் குறிப்பினை
அறிந்து நடந்துகொள்ளும் மக்களும் உள்ளனர். (பொதுவாழ்வில், பிறர் குறிப்பறிந்து
நடந்துகொள்ளும் மக்களும் உள்ளனர்)
தூவி
விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உண்டு. அதுபோல, நன்கு எடுத்துச் சொன்னாலும் பேதைக்கு அறிவு
தோன்றாது.
நாறா = நாற்றாக
முளைக்காத
தூவா விரைத்தல் = தூவி
விதைத்தல்
பொருள்
பூவாதே காய்க்கும் மரமும்
உள, மக்கள் உளும் ஏவாதே நின்று
உணர்வார் தாம் உளரே, தூவா
விரைத்தாலும் நன்று ஆகா வித்து
எனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
பூக்காமல்
காய்க்கும் அத்தி மரம் ஆலமரம்